மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

ஆசியாவின் மிக உயரமான இரட்டைக் கோபுரம் – கொழும்பில் அமைக்க உடன்பாடு கைச்சாத்து

ஆசியாவின் மிக உயரமானதும், உலகின் ஒன்பதாவது உயரமானதுமான இரட்டைக் கோபுரக் கட்டடம் சிறிலங்காவின் தலைநகரான கொழும்பில் அமைக்கப்படவுள்ளது.

சிறிலங்கா அதிபரின் செயலராகிறார் ஒஸ்ரின் பெர்னான்டோ

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் செயலராக ஒஸ்ரின் பெர்னான்டோ நியமிக்கப்படவுள்ளார். 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சிறிலங்கா அதிபராக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதில் இருந்து. அவரது செயலராக பி.பி.அபயகோன் பதவி வகித்து வந்தார்.

அம்பாந்தோட்டையை சீனாவுக்கு வழங்குவதற்கான முட்டுக்கட்டை அகன்றது

அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் அதனுடன் இணைந்த 15 ஆயிரம் ஏக்கர் காணியில் கைத்தொழில் பூங்காவையும் அமைப்பதற்கு, சிறிலங்கா அரசாங்கம்  இரண்டு சீன நிறுவனங்களுடன் உடன்பாடு செய்து கொள்வதற்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை சிறிலங்கா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவத்தில் ஒற்றுமை முக்கியம் – இந்திய தூதுவர் அறிவுரை

வடக்கில் தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவத்துக்கிடையில் ஒற்றுமை மிகவும் முக்கியமானது என்று சிறிலங்காவுக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து வலியுறுத்தியுள்ளார்.

32 இலங்கையர்களை சிறப்பு விமானத்தில் நாடு கடத்தியது பல்கேரியா

பல்கேரியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 32 இலங்கையர்கள் சிறப்பு விமானம் மூலம் கொழும்புக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

ஒற்றையாட்சித் தன்மையை சிறிலங்கா அரசாங்கம் பாதுகாக்கும் – மகாநாயக்கர்களிடம் உறுதி

நாட்டின் ஒற்றையாட்சித் தன்மையை சிறிலங்கா அரசாங்கம் பாதுகாக்கும் என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, உறுதியளித்துள்ளார்.

11 தமிழர்களைக் கடத்திய சிறிலங்கா கடற்படை புலனாய்வு அதிகாரிக்குப் பிணை

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில், 2009ஆம் ஆண்டு 11 தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சிறிலங்கா கடற்படைப் புலனாய்வு அதிகாரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஒக்ரோபர் முதல் வாரத்தில் கிழக்கு உள்ளிட்ட 3 மாகாணசபைகளுக்கான தேர்தல்

கிழக்கு, வட மத்திய, சப்ரகமுவ மாகாணசபைகளுக்கான தேர்தலை, வரும் ஒக்ரோபர் மாதம் முதல் வாரத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக, சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

சம்பூரில் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி திட்டமும் கைவிடப்பட்டது

சம்பூரில் இயற்கை எரிவாயு மின் நிலையத்தை அமைக்கும் முடிவை சிறிலங்கா அரசாங்கம் கைவிட்டுள்ளது. அங்கு 50 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி நிலையமே அமைக்கப்படும் என்று, சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

ஓய்வுபெற்றவர்களுக்கு இராஜதந்திரப் பதவி கிடையாது – வெளிவிவகார அமைச்சர் உறுதி

இராஜதந்திர சேவையில் கல்விப் புலமை மற்றும் ஆற்றல் கொண்டவர்களுக்கே நியமனங்கள் வழங்கப்படும் என்று சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.