மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் அமெரிக்காவின் பதில் உதவிச் செயலர் சந்திப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பதில் உதவிச்செயலர் அலிஸ் வெல்ஸ் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் பேச்சு நடத்தினார்.

சரத் பொன்சேகா மீது போர்க்குற்றம் சுமத்தப்படாதது ஏன்? – கேள்வி எழுப்புகிறது பொது ஜன முன்னணி

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக, போர்க்குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படாதது ஏன் என்று, மகிந்த ராஜபக்ச ஆதரவு கட்சியான, சிறிலங்கா பொதுஜன முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.

தனக்கெதிராக போர்க்குற்ற விசாரணை நடத்தப்படாது என்று ஐ.நாவிடம் உறுதிமொழி பெற வேண்டுமாம்

தனக்கு எதிராக அனைத்துலக போர்க்குற்ற விசாரணை நடத்தப்படாது என்று ஐ.நாவிடம் உறுதிமொழியை சிறிலங்கா அரசாங்கம் பெற வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியான, ஜெனரல் ஜெகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

போரில் நடந்த சம்பவங்கள் எல்லாம் போர்க்குற்றங்கள் இல்லை- சிறிலங்கா அரசு

உறுதியான ஆதாரங்கள் இருந்தால் மாத்திரமே, இராணுவ கட்டளைப் பீடத்தைச் சேர்ந்த எவர் மீதும், போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தண்டனையில் இருந்து தப்பிக்கும் நிலை முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் – சம்பந்தன்

தண்டனையில் இருந்து தப்பிக்கும் நிலை சிறிலங்காவில்  முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ், நேற்றுமாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

கொழும்பு வந்தார் இந்திய வெளிவிவகார செயலர் ஜெய்சங்கர்

இந்திய வெளிவிவகார செயலர் எஸ்.ஜெய்சங்கர்  நேற்றுமாலை கொழும்பை வந்தடைந்துள்ளார். கொழும்பில் இன்று ஆரம்பமாகும் இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கில் பங்கேற்கவே அவர் சிறிலங்கா வந்துள்ளார்.

மத்தல விமான நிலைய அபிவிருத்தி குறித்து இந்தியாவுடன் பேச அமைச்சரவை உபகுழு

மத்தல விமான நிலையத்தை இந்திய நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, அதனை எவ்வாறு சிறந்த முறையில் அபிவிருத்தி செய்யலாம் என்பது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் இந்தியாவுடன் தொடர்பு கொண்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பில் நாளை தொடங்குகிறது இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கு

இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கு-2017 கொழும்பில் நாளை ஆரம்பமாகவுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்க இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் தலைமையிலான உயர்மட்டக் குழு புதுடெல்லியில் இருந்து கொழும்பு வரவுள்ளது.

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் காலமானார்

சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் இன்று கொழும்பு தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார். அவருக்கு வயது 80 ஆகும்.