மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

சிறிலங்காவைச் சாடிய ஐரோப்பிய ஒன்றியத்தின் கருத்துடன் அமெரிக்கத் தூதுவரும் இணக்கம்

ஜெனிவா தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சிறிலங்கா எந்த முன்னேற்றத்தையும் காட்டத் தவறியிருப்பது, அனைத்துலக சமூகத்தை ஏமாற்றமடையச் செய்துள்ளது என்ற, ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதியின் கருத்தை, சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவரும், ஒப்புக் கொண்டுள்ளார்.

20 ஆவது திருத்தச்சட்ட வரைவினால் கிழக்கு மக்களுக்கே பேரிழப்பு

20 ஆவது திருத்தச்சட்ட வரைவு சிறிலங்கா அரசாங்கத்தினால்  நிறைவேற்றப்பட்டால், கிழக்கு மாகாணமே பெரும் இழப்புகளைச் சந்திக்கும் என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் எச்சரித்துள்ளன.

புலிகளுடனான போர் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளத் தயார் – சிறிலங்கா இராணுவத் தளபதி

விடுதலைப் புலிகளுடனான மூன்று பத்தாண்டு கால போர் அனுபவங்களை பிற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளத் தாயாராக இருப்பதாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சியில் இருந்து 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீக்கம்?

சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீக்கப்படவுள்ளனர் என்று கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கொழும்பில் இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கு

புதுடெல்லியைத் தளமாகக் கொண்ட, இந்தியா பவுண்டேசன் அமைப்பின் ஏற்பாட்டில், இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கு-2017 வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கொழும்பில் நடைபெறவுள்ளது.

சிறிலங்கா குறித்து அனைத்துலக சமூகம் ஏமாற்றம் – ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி

ஜெனிவா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, 18 மாதங்கள் கழித்தும், சிறிலங்கா அரசாங்கம் எந்த முன்னேற்றத்தையும் காண்பிக்கவில்லை என்பது அனைத்துலக சமூகத்தை ஏமாற்றமடையச் செய்துள்ளது என்று சிறிலங்காவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின், இராஜதந்திர விவகாரங்களுக்கான பிரதிநிதி போல் கொட்பிறி தெரிவித்துள்ளார்.

மாகாணசபைகள் கலைக்கப்பட்ட பின்னர் மேற்பார்வை அரசு – விக்னேஸ்வரன் யோசனை

20 ஆவது திருத்தச்சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டு, அதன் கீழ் மாகாணசபைகள் கலைக்கப்பட்டால், அதன் பின்னர் மாகாணங்களில் மேற்பார்வை அரசு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரி கொழும்பு வருகிறார்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியாவுக்கான  பதில் உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ் இந்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட அரச அதிகாரிகளுக்கான கட்டுப்பாடு தளர்வு – கள அதிகாரிக்கு தடை

அரச சேவையில் உள்ள களப்பணியாற்றும் அதிகாரிகள் மாத்திரமே, உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆசிரியர்களுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சியில் சிறிலங்கா இராணுவத்தினர் மீது வாள்வெட்டு – 6 பேர் கைது

கிளிநொச்சி – ஊற்றுப்புலம் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றும் தமிழர்களான இரண்டு சிப்பாய்கள் மீது, நேற்றுமுன்தினம் இரவு வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.