மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 13 மனுக்கள்

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு எதிராக, சிறிலங்கா உச்ச நீதிமன்றத்தில் 13 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜனவரியிலேயே உள்ளூராட்சித் தேர்தல்

உள்ளூராட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு ஒக்ரோபர் மாதம் வெளியிடப்பட்டு, ஜனவரி மாத இறுதியில் தேர்தல்கள் நடத்தப்படும் என்று சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சிறிலங்கா அதிபருடன் பேசவுள்ளாராம் ஜெனரல் ஜயசூரிய

தனக்கு எதிராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சுமத்தியுள்ள போர்க்குற்றச்சாட்டு தொடர்பாக, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரிய சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேசவுள்ளார்.

அனைத்துலக தடைகளில் இருந்து நாட்டைப் பாதுகாத்தது கூட்டு அரசாங்கமே – சிறிலங்கா அதிபர்

ஐக்கிய தேசியக் கட்சி- சிறிலங்கா சுதந்திரக் கட்சி கூட்டு அரசாங்கமே, அனைத்துலக தடைகளில் இருந்து நாட்டைக் காப்பாற்றியது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

டிசெம்பரில் உள்ளூராட்சித் தேர்தல் நடத்த பரீட்சை ஆணையாளர் எதிர்ப்பு

வரும் டிசெம்பர் மாதத்தில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்தினால், கபொத சாதாரண தரப் பரீட்சைகள் பாதிக்கப்படும் என்று சிறிலங்காவின் பரீட்சைகள் ஆணையாளர் புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

ஜெனரல் ஜயசூரிய மீது கைவைக்க எவரையும் விடமாட்டேன் – சிறிலங்கா அதிபர்

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரியவையும்,  விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரிட்ட படையினரையும், தமது அரசாங்கம் பாதுகாக்கும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜெனரல் ஜயசூரியவுக்கு ஆதரவாக அமைச்சர்கள் – சரத் பொன்சேகாவின் கருத்து தனிப்பட்டதாம்

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரிய போர்க்காலத்தில் குற்றங்களை இழைத்தார் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியமை, அவரது தனிப்பட்ட கருத்தே என்று சிறிலங்கா அமைச்சர்கள் மகிந்த சமரசிங்கவும், ருவான் விஜேவர்த்தனவும் தெரிவித்துள்ளனர்.

சம்பந்தனைப் பாராட்டிய அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர்

பிரதான கொள்கையில் நீங்கள் உறுதியாக இருக்கின்றீர்கள்  என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான பதில் உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ்,  பாராட்டியுள்ளார்.

நாம் எமது உரிமைகளை இழந்து விட்டோம் – அமெரிக்க பதில் உதவிச்செயலரிடம் சம்பந்தன்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பதில் உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ் நேற்றுக்காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இலத்தீன் அமெரிக்காவில் தன் மீதும் கோத்தா மீதும் விசாரணை நடத்தப்படும் என்கிறார் மகிந்த

தன் மீதும், தனது சகோதரரான கோத்தாபய ராஜபக்ச மீதும் கூட இலத்தீன் அமெரிக்க நாடுகளில் போர்க்குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.