மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

மகிந்த குடும்பத்துக்கு எதிரான விசாரணைகளை தீவிரப்படுத்துமாறு அமைச்சரவையில் அழுத்தம்

மகிந்த ராஜபக்ச குடும்பத்தினர் மற்றும் முன்னைய அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையில், தேவையற்ற இழுத்தடிப்புகள் மேற்கொள்ளப்படுவதாக, நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் காரசாரமான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சாகல ரத்நாயக்கவுக்கு வெளிவிவகார அமைச்சர் பதவி?

சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் பதவிக்கு, சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குடாநாட்டில் 1000 சிறப்பு அதிரடிப்படையினர் – புலனாய்வு செயற்பாடுகளும் அதிகரிப்பு

யாழ்ப்பாணக் குடாநாட்டில் வன்முறைகளைக் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் பொறுப்பு சிறப்பு அதிரடிப்படையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முள்ளிவாய்க்காலுக்குச் செல்வதற்கு தமிழிசைக்குத் தடை விதித்த பாஜக மேலிடம்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த பாஜகவின் தமிழ்நாடு மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், இறுதிப்போர் நடந்த முள்ளிவாய்க்காலுக்குச் செல்வதற்குத் திட்டமிட்டிருந்த போதிலும், பாஜக மேலிடத்தின் உத்தரவினால், அந்தப் பயணத்தை கைவிட்டு அவசரமாக கொழும்பு திரும்பியுள்ளார்.

படகில் வந்த 20 அகதிகளை கொழும்புக்குத் திருப்பி அனுப்பியது அவுஸ்ரேலியா

கிறிஸ்மஸ் தீவில் இருந்து சுமார் 20 அகதிகள் வாடகை விமானம் ஒன்றின் மூலம் இன்று காலை கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று தி ஒஸ்ரேலியன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டை புதுப்பிக்க சிறிலங்கா விருப்பம்

அமெரிக்காவுடன் 2007ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட, பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டை புதுப்பித்துக் கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வைகோ புலிகள் இயக்க உறுப்பினராம் – திருப்பி அனுப்பியது மலேசியா

தமிழ்நாட்டின் மதிமுக பொதுச் செயலர் வைகோ மலேசியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு, இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

கட்டாரில் விமான நிலையம், வணிக நிறுவனங்களில் முண்டியடிக்கும் கூட்டம் – இலங்கையர்கள் அச்சம்

கட்டாருடனான அனைத்துத் தொடர்புகளையும் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பாஹ்ரெய்ன், எகிப்து, யேமன் ஆகிய நாடுகள் துண்டித்துள்ளதால், கட்டாரில் உள்ள இலங்கையர்கள் மீது எந்த உடனடிப் பாதிப்பும் ஏற்படாது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐ.நா பொதுச்செயலர், கொமன்வெல்த் செயலருடன் சிறிலங்கா பிரதமர் சந்திப்பு

அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றுக்காலை ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெசைச் சந்தித்து பேச்சு நடத்தினார்.

கட்டாருடன் இராஜதந்திரத் தொடர்புகளை துண்டித்துள்ள அரபு நாடுகள் – சிறிலங்காவுக்கும் நெருக்கடி

இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புகளை வைத்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள கட்டாருடன், இராஜதந்திரத் தொடர்புகளைத் துண்டிப்பதாக ஐந்து மத்திய கிழக்கு நாடுகள் அறிவித்துள்ள நிலையில், சிறிலங்காவும் நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது.