மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

அவசரகாலச் சட்டம் பிரகடனம் – வெளிநாட்டு உதவியைக் கோருகிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்காவில் இன்று நள்ளிரவு அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனம் செய்ய சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடந்த தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

குண்டுத் தாக்குதலுக்குப் பயன்படுத்திய வான், கார் சிக்கின- மறைவிடங்களும் முற்றுகை

சிறிலங்காவில் நேற்று பல்வேறு இடங்களிலும் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளுடன் தொடர்புடைய நபர்களால் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் இரண்டு கைப்பற்றப்பட்டுள்ளன.

சிறிலங்கா குண்டுவெடிப்புகளில் 207 பேர் பலி – 450 பேர் காயம் (செய்திகளின் தொகுப்பு)

சிறிலங்காவில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 207 ஆக அதிகரித்துள்ளது என சிறிலங்கா காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

தெமட்டகொட குண்டுவெடிப்பில் 3 சிறிலங்கா காவல்துறையினர் பலி

தெமட்டகொட பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் சிறிலங்கா காவல்துறை அதிகாரிகள் மூவர் கொல்லப்பட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்கொலைக் குண்டுதாரிகளே தாக்குதல் – விசாரணைகளில் தெரியவந்தது

சிறிலங்காவில் இன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை இஸ்லாமிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைக் குண்டுதாரிகளே மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் – தெமட்டகொடவிலும் குண்டுவெடிப்பு

சிறிலங்கா முழுவதும் இன்று இரவு 6 மணி தொடக்கம்  ஊரடங்குச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குண்டுவெடிப்புகளில் 9 வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 185 பேர் பலி – 469 பேர் காயம்

சிறிலங்காவில் இன்று இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில், 185 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று பிந்திக் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்துக்குள் 26 சடலங்கள்

கொழும்பு- கொச்சிக்கடை  அந்தோனியார் தேவாலய வளாகத்தில் 26 பேரின் சடலங்கள் கிடப்பதாக சிறிலங்கா காவல்துறையினரை மேற்கொள்காட்டி, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா குண்டுவெடிப்புகளில் 129 பேருக்கு மேல் பலி

சிறிலங்காவில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் சுமார் 129 வரையானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று  தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு தேசிய மருத்துவமனையில் 24 பேரின் சடலங்கள்

கொழும்பில் கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் மற்றும் ஆடம்பர விடுதிகளில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் கொல்லப்பட்ட 24 பேரின் சடலங்கள், கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.