சிறிலங்காவை காப்பாற்ற முனையும் அமெரிக்க அதிகாரிகள் – அம்பலப்படுத்துகிறார் பிரட் அடம்ஸ்
சிறிலங்கா மீது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமெரிக்க அதிகாரிகள் பலர் எதிர்த்திருந்தனர். ஆனால் சிறிலங்காவிற்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவரான ரொபேட் ஓ பிளேக் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலராக பதவி உயர்த்தப்பட்ட பின்னர், இந்தத் தீர்மானத்தை உந்தித் தள்ளினார்.
