மேலும்

செய்தியாளர்: நித்தியபாரதி

நீர்மூழ்கிகளின் போர்க்களமாகும் இந்திய மாக்கடல் – சிறிலங்காவின் வகிபாகம் என்ன?

இந்த உடன்பாடானது மூலோபாயப் பங்காளியாக எந்தவொரு உலகின் பாரிய சக்தியையும் ஏற்றுக் கொள்வதில்லை என்கின்ற இந்தியாவின் அடிப்படைக் கோட்பாட்டை ஆட்டங்காணச் செய்துள்ளது. இது இந்தியாவின் பாரியதொரு கோட்பாட்டு மாற்றத்திற்கான சமிக்கையாகக் காணப்படுகிறது.

கோத்தாவின் திடீர் அமெரிக்கப் பயணத்தின் இரகசியம் – உபுல் ஜோசப் பெர்னான்டோ

தான் அமெரிக்காவிற்குச் சென்றால் அங்குள்ள புலி ஆதரவு அமைப்புக்கள் தனக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் என ஒருதடவை கோத்தபாய தெரிவித்திருந்தார். அமெரிக்கச் சிறையில் அடைக்கப்படுவதை விட சிறிலங்காவில் இருப்பது சிறந்தது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

பிரித்தானியாவில் கல்வியில் முன்னிலை வகிக்கும் தமிழ் மாணவர்கள்

பிரித்தானியாவில் வாழும் தமிழ்மொழியைத் தமது தாய்மொழியாகக் கொண்ட சிறுவர்கள், ஆங்கில மொழியைத் தமது சொந்த மொழியாகக் கொண்ட சிறுவர்களை விட சிறப்பாகச் செயற்படுகிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது.

சிறிலங்காவுக்கு வக்காலத்து வாங்கும் சமந்தா பவர் – அனைத்துலக ஊடகம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அண்மையில் அதிகரித்துள்ள கைதுகள், கடத்தல்கள் போன்றன அமெரிக்காவிற்கு எச்சரிக்கை மணியை எழுப்ப வேண்டும். பத்தாண்டு காலத்தில் ராஜபக்சவால் இழைக்கப்பட்ட தமிழர் எதிர்ப்பு நடவடிக்கை மீண்டும் தற்போதைய ஆட்சியில் தொடர்கிறது என்கின்ற செய்தி அமெரிக்காவின் காதுகளுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.

மகிந்தவின் முகத்தில் அறைந்த சீனா – உபுல் ஜோசப் பெர்னான்டோ

சீன அதிபரின் இந்தக் கூற்றானது மகிந்தவை இலக்காகக் கொண்டதா அல்லது இல்லையா என்பது எமக்குத் தெரியாது. எனினும், சீனா இன்னமும் தனது கைக்குள் உள்ளது என சூளுரைத்த மகிந்தவின் கொட்டத்தை அடக்குவதற்காகவே சீன அதிபர் இவ்வாறானதொரு அறிவித்தலை விடுத்ததாக சிலர் கூறுகின்றனர்.

சமஸ்டியைத் தமிழ் மக்கள் தெரிவு செய்வதற்கு சிங்களவர்களே காரணம் – இரா.சம்பந்தன் செவ்வி

கடந்த காலத்தில் தமிழ் மக்கள் சமஸ்டி ஆட்சியை விரும்பவில்லை எனவும், சிங்களவர்கள் மற்றும் சிங்கள அரசியல்வாதிகளினது செயற்பாடுகளே சமஸ்டி ஆட்சியைத் தமிழ் மக்கள் தெரிவு செய்வதற்கான காரணியாக அமைந்ததாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் நல்லிணக்கம் சாத்தியமில்லை – அனைத்துலக ஊடகம்

உண்மையில், மைத்திரிபால சிறிசேன தான் சார்ந்த சிங்கள சமூகத்தால் ‘துரோகி’ என்கின்ற முத்திரையைக் குத்த விரும்பவில்லை. இது இந்தியாவின் மத்திய அரசாங்கத்திற்கும் பொருத்தமானதாகும்.

சிறிலங்காவில் ஆர்வத்தை ஏற்படுத்தாத தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்

பூகோள அமைவிட ரீதியாக தமிழ்நாடு, சிறிலங்காவிற்கு மிகவும் அருகிலுள்ள மாநிலமாகும். இதற்கப்பால், வரலாற்று ரீதியாக நோக்கில் தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள தேர்தலானது சிறிலங்கா வாழ் மக்களை நாட்டமுறச் செய்திருக்க வேண்டும்.

இந்தியாவைச் சமாளித்த ஜே.ஆர், சீனாவைச் சமாளிக்கும் ரணில் – உபுல் ஜோசப் பெர்னான்டோ

இந்தியா தானாகவே உருவாக்கிய போர் என்கின்ற பொறியிலிருந்து சிறிலங்காவைப் பாதுகாப்பதற்கு முயற்சித்தது போன்றே, சீனாவும் தன்னால் உருவாக்கப்பட்ட கடன் பொறிக்குள்ளிருந்து சிறிலங்காவைப் பாதுகாப்பதில் விருப்பங் கொண்டுள்ளதா அல்லது இல்லையா என்பது கேள்விக்குறியே.

இந்திய சார்பு ரணில் அரசுடன் சீனா எப்படி நெருங்கியது? – இந்திய ஊடகம்

சிறிலங்கா பிரதமரின் சீனாவிற்கான பயணத்தின் இறுதியில், இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான உறவானது மகிந்த ஆட்சிக்காலத்தில் இருந்த நிலைக்கு மீளத் திரும்பிவிட்டது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.