மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

கொழும்பில் தீவிர பேச்சுக்களில் ஈடுபட்ட ஜெய்சங்கர் – இன்று கூட்டமைப்புடன் சந்திப்பு

இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று கொழும்பில் சிறிலங்கா அரசாங்கத்துடன் தீவிர பேச்சுக்களில் ஈடுபட்டிருந்த போதும், இந்தப் பேச்சுக்கள் பற்றிய விபரங்கள் ஏதும் வெளியில் கசிய விடப்படவில்லை.

கடல் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஜப்பான் – சிறிலங்கா உயர்மட்டப் பேச்சு

பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக, சிறிலங்காவும், ஜப்பானும், இன்று உயர்மட்டப் பேச்சுக்களை நடத்தவுள்ளன.

இராணுவக் கட்டளை அமைப்பில் மாற்றம்- டிவிசன் தளபதியாக கீழ் இறக்கப்பட்டார் சவேந்திர சில்வா

சிறிலங்கா இராணுவக் கட்டளை அமைப்பில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள அதேவேளை, போர்க்குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா 53ஆவது டிவிசனின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

எங்கிருந்து போர் விமானங்களைக் கொள்வனவு செய்வதென்று தீர்மானி்க்கவில்லையாம்

பாகிஸ்தானிடம் இருந்து போர் விமானங்கள் எதையும் வாங்குவதற்கு இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

பேரவை விவகாரத்தில் விக்னேஸ்வரனுக்கு வெளிநாட்டு இராஜதந்திரிகள் அழுத்தம்

தமிழ் மக்கள் பேரவை தொடர்பாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளிநாட்டு இராஜதந்திர அழுத்தங்களை எதிர்கொண்டிருப்பதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

சிறிலங்காவின் திட்டத்தை முடங்கிய இந்தியா – வெள்ளைத் தாளில் வந்த வில்லங்கம்

இந்தியாவின் எதிர்ப்புகளை அடுத்து, பாகிஸ்தானிடம் ஜே.எவ்.-17 போர் விமானங்களைக் கொள்வனவு செய்யும் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம், தற்போதைக்காவது கைவிட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அடுத்தமாதம் யாழ்ப்பாணம் செல்கிறார் சுஸ்மா சுவராஜ்

இந்திய – சிறிலங்கா கூட்டுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க அடுத்த மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் யாழ்ப்பாணத்துக்கும் செல்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா செல்கிறார் இந்திய வெளிவிவகாரச் செயலர் – தமிழ்க்கட்சிகளைப் புறக்கணிப்பு?

சிறிலங்கா அரசின் உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சு நடத்துவதற்காக இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் வரும் 12ஆம் நாள் கொழும்பு செல்லவுள்ளார்.

சிறிலங்காவின் நல்லிணக்க முயற்சிகளில் நோர்வே பங்கேற்காது – போர்ஜ் பிரெண்டே

சிறிலங்காவின் நல்லிணக்க முயற்சிகளில், நோர்வே முன்னரைப் போன்று எந்தப் பங்கையும் வகிக்காது என்று, அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரெண்டே தெரிவித்துள்ளார்.

போர் விமானங்கள் குறித்து பாகிஸ்தானுடன் பேசவேயில்லை – என்கிறார் பாதுகாப்புச்செயலர்

பாகிஸ்தானிடம் இருந்து, எட்டு ஜே.எவ்-17 போர் விமானங்களை கொள்வனவு செய்யும் உடன்பாட்டில், சிறிலங்கா கையெழுத்திட்டுள்ளதாக வெளியான செய்திகளை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி நிராகரித்துள்ளார்.