மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

சிறிலங்கா படையினரின் பிடியில் க.வே.பாலகுமாரன்- மற்றொரு போர்க்குற்ற ஒளிப்படம்

இறுதிக்கட்டப் போரில், சிறிலங்காப் படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் க.வே.பாலகுமாரன், மற்றும் அவரது மகன் உள்ளிட்ட மூவர் சிறிலங்காப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள புதிய போர்க்குற்ற ஒளிப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

சிறிலங்காவுக்கு உதவ வந்தது அமெரிக்கப் புலனாய்வு அதிகாரிகள் குழு

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் சிறிலங்காவில் இருந்து கொண்டு செல்லப்பட்டு, அமெரிக்காவில் பதுக்கப்பட்டுள்ள, சொத்துக்கள், நிதி தொடர்பான விசாரணைகளுக்கு உதவ, அமெரிக்க புலனாய்வு அதிகாரிகளின் குழுவொன்று சிறிலங்கா வந்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெகத் டயஸ் நியமனத்துக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்

இறுதிக்கட்டப் போரில் அதிகளவான மனித உரிமை மீறல்களைப் புரிந்த படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கிய, மேஜர் ஜெனரல் ஜெகத் டயசை, சிறிலங்கா அரசாங்கம் இராணுவத் தலைமை அதிகாரியாக நியமித்துள்ளதற்கு, மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்குத் தடை – நல்லாட்சி அரசின் நயவஞ்சக நல்லிணக்க அணுகுமுறை

முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட முல்லைத்தீவுப் பிரதேசத்தில், நாளை நடத்த திட்டமிட்டிருந்த நினைவேந்தல் நிகழ்வுகளை சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டு, நீதிமன்ற உத்தரவின் மூலம் தடை செய்துள்ளது.

போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக நியமனம்

சிறிலங்கா இராணுவத்தின் தலைமை அதிகாரியாக (Chief of Staff) மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.

சிறிலங்கா இராணுவத்துக்கு குதிரைகளை வழங்குவதில் இந்தியாவும் பாகிஸ்தானும் போட்டி

சிறிலங்கா இராணுவத்துக்கு குதிரைகளை அன்பளிப்புச் செய்வதில் இந்தியாவும் பாகிஸ்தானும் போட்டி போட்டுக் கொண்ட விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

விடுதலைப் புலிகளை நினைவு கூர அனுமதிக்க முடியாது – சிறிலங்கா அரசாங்கம்

சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்து ஆறு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், விடுதலைப் புலிகளை நினைவு கூரும் எந்தவொரு முயற்சிக்கும் அனுமதி அளிக்கப்படாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் இராணுவத் தளபதியின் கொழும்பு பயணம் கடைசி நேரத்தில் ரத்து

பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீப் இன்று சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவிருந்து ஐந்து நாள் பயணம், கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவுக்கும் தூதுவர் பதவி – நல்லாட்சி அரசிலும் இராணுவத்துக்கு முன்னுரிமை

சிறிலங்காவின் கூட்டுப்படைகளின் தளபதியாக பதவி வகிக்கும், ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய பிரேசிலுக்கான தூதுவராக நியமிக்கப்படவுள்ளார்.

புலம்பெயர் தமிழர்களுடன் சாதகமான சந்திப்பு – எரிக் சொல்ஹெய்ம் தகவல்

புலம்பெயர் தமிழர்களுடன் தாம் பேச்சுக்களை நடத்தியிருப்பதாகவும், இந்தப் பேச்சுக்கள் சாதகமான வகையில் அமைந்திருப்பதாகவும், சிறிலங்காவுக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.