மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

துறைமுக நகர திட்டத்தை விரைவுபடுத்த சீனா- சிறிலங்கா இணக்கம் – இழப்பீடு குறித்து சீனா மௌனம்

முடங்கியுள்ள கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் சீனாவும் சிறிலங்காவும், உறுதியுடன் இருப்பதாக, சீனாவின் மூத்த இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா- சீனா இடையே ஏழு உடன்பாடுகள் கைச்சாத்து

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனா சென்றுள்ள நிலையில், இருநாடுகளுக்கும் இடையில் நேற்று ஏழு உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

கொழும்பில் பணியகத்தை திறக்கிறது சீன அபிவிருத்தி வங்கி

சீன அபிவிருத்தி வங்கியின் பணியகம் ஒன்று விரைவில் கொழும்பில் திறக்கப்படவுள்ளது. சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், சீன அபிவிருத்தி வங்கியின் தலைவர், ஹு ஹுவாய்பாங்கிற்கும் இடையில் நேற்று பீஜிங்கில் நடந்த சந்திப்பிலேயே இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டது.

சிறிலங்கா- சீனப் பிரதமர்கள் சந்திப்பு – 500 மில்லியன் யுவான் கொடை வழங்குகிறது சீனா

சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர்   ரணில் விக்கிரமசிங்க நேற்று சீனப் பிரதமர் லி கெகியாங்கைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

சிறிலங்காவுக்கு ஏன் வந்தார் போர்க்குற்ற விவகார நிபுணர்?- அமெரிக்கத் தூதரகம் அறிக்கை

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் சிறப்பு ஒருங்கிணைப்பாளர், ரொட் புச்வால்ட் மற்றும், தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான பிரதி உதவிச் செயலர் மன்பிரீத் ஆனந்த் ஆகியோர் சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பாக, அமெரிக்கத் தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சீனா சென்றடைந்தார் ரணில்- 125 மில்லியன் இழப்பீடு குறித்து முக்கிய பேச்சு

மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டு நேற்று நண்பகல் கொழும்பில் இருந்து புறப்பட்ட சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்றிரவு சீனத் தலைநகர் பீஜிங் சென்றடைந்தார்.

பனாமா ஆவணங்களில் சிறிலங்கா அரசியல்வாதிகள் மூவர் – மகிந்த குடும்பத்தினரா?

உலகளாவிய ரீதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள- பனாமா ஆவணங்களில், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச குடும்பத்தினரின் பெயர்களும் உள்ளடங்கியிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனா அமைக்கும் துறைமுக நகருக்கு சிறப்பு மாவட்ட நிலை, தனிச்சட்டங்கள் – என்கிறார் ரணில்

சீனாவுடன் பொருளாதார, வர்த்தக உறவுகளை விரிவாக்கிக் கொள்ளவதற்கு சிறிலங்கா எதிர்பார்த்திருப்பதாகவும், சிறிலங்காவில் முதலீடு செய்வதற்காக இன்னும் அதிகளவு சீன முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பிரதமருக்கு செங்கம்பளம் விரிக்கத் தயாராகும் சீனா- 10 உடன்பாடுகள் கையெழுத்தாகும்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சீனாவுக்கான மூன்று நாள் பயணத்தை ஆரம்பிக்கவுள்ள நிலையில், இந்தப் பயணத்தின் போது குறைந்தபட்சம் 10 இருதரப்பு உடன்பாடுகள் கையெழுத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, ஹிந்துஸ்தான் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் பல அமெரிக்கப் போர்க்கப்பல்கள் சிறிலங்கா வரும்- ஏழாவது கப்பற் படையணி தளபதி

அமெரிக்கக் கடற்படையின் மேலும் பல கப்பல்கள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் என்று, அமெரிக்க கடற்படையின் ஏழாவது கப்பற் படையணியின் கட்டளை அதிகாரியான வைஸ் அட்மிரல் ஜோசப் ஓகொயின் தெரிவித்துள்ளார்.