மேலும்

செய்தியாளர்: யாழ்ப்பாணச் செய்தியாளர்

யாழ்ப்பாணத்தில் ரணில் பங்கேற்ற நிகழ்வுகளை வடக்கு மாகாணசபை புறக்கணிப்பு

யாழ்ப்பாணத்தில் இன்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்ற நிகழ்வுகளில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடக்கு மாகாணசபையின் அமைச்சர்கள் மற்றும் ஆளும்தரப்பினர் எவரும் கலந்து கொள்ளவில்லை.

ஒற்றையாட்சி முறையில் தமிழ்மக்களுக்கு விமோசனம் கிடைக்காது – முதலமைச்சர் விக்னேஸ்வரன்

ஒற்றையாட்சி முறையினால் தமிழ்மக்களுக்கு விமோசனம் கிடைக்காது என்றும், அது நீக்கப்பட்டு கூட்டாட்சி முறை கொண்டு வரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்  வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்.

உயர்பாதுகாப்பு வலயக் காணிகள் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படும் – வளலாயில் மைத்திரி உறுதி

வடக்கிலுள்ள மக்களின் காணிப்பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றும், உயர் பாதுகாப்பு வலயக் காணிகள் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

கீரிமலையில் மோடியுடன் கைகுலுக்கிய பல்கலைக்கழக மாணவன் இந்திய பாதுகாப்பு அதிகாரிகளால் கைது

யாழ்ப்பாணத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கைகுலுக்கிய பல்கலைக்கழக மாணவன் ஒருவர் இந்தியப் பாதுகாப்பு அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு, சிறிலங்கா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அரசியல்தீர்வை இந்தியா உறுதிப்படுத்த வேண்டும் – மோடியிடம் கோரினார் விக்னேஸ்வரன்

இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு ஒன்றை உறுதிப்படுத்துமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி – பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றார்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாணத்துக்கு இன்று பயணம் மேற்கொண்டு, பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றதுடன், வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களையும் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

விசாரணை அறிக்கை இனிமேல் பிற்போடப்படாது – விக்னேஸ்வரனுக்கு ஐ.நா வாக்குறுதி

சிறிலங்காவில் நடந்த போர் குறித்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் விசாரணை அறிக்கை வரும் செப்ரெம்பர் மாதம் கண்டிப்பாக வெளியிடப்படும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் ஐ.நா உறுதியளித்துள்ளது.

தமிழ்மக்களை ஐ.நா ஏமாற்றிவிட்டது – யாழ். பேரணியில் மன்னார் ஆயர் உரை

விசாரணை அறிக்கையைப் பிற்போட்டுள்ளதன் மூலம், தமிழ் மக்களை ஐ.நா ஏமாற்றி விட்டதாக மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

தமிழ்மக்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் பிரமாண்ட பேரணி

ஐ.நா விசாரணை அறிக்கையை விரைவில் வெளியிட வலியுறுத்தியும், படையினரின் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கோரியும், யாழ். பல்கலைக்கழக சமூகத்தின் ஏற்பாட்டில்  பெரியளவிலான அமைதிப் பேரணி ஆரம்பமாகியுள்ளது.

வடக்கு மாகாணசபை உறுப்பினர் கனகசுந்தரசுவாமி காலமானார்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் வீரவாகு கனகசுந்தரசுவாமி (வயது-67) இன்று மாலை யாழ்ப்பாணத்தில் காலமானார்.