மேலும்

செய்தியாளர்: யாழ்ப்பாணச் செய்தியாளர்

தமிழர் இனஅழிப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்து முதலமைச்சர் ஆற்றிய உரை

தமிழர் மீது நிகழ்த்தப்பட்டது இனஅழிப்பே என்பதை வலியுறுத்தி, வடக்கு மாகாணசபையில் இன்று தீர்மானத்தைக் கொண்டு வந்து வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் நிகழ்த்திய உரை-

“இறுதிப்போரில் இடம்பெற்றது இனப்படுகொலையே“ – வடக்கு மாகாணசபையில் வரலாற்றுத் தீர்மானம்

சிறிலங்காவில் இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்றது இனப்படுகொலையே என்பதை வலியுறுத்தும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம், வடக்கு மாகாணசபையில் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

எக்காரணம் கொண்டும் வடக்கில் படைக்குறைப்பு நடக்காது – படையினருக்கு வாக்குறுதி

வடக்கில் இருந்து எந்தக் காரணத்தைக் கொண்டும் சிறிலங்காப் படையினரைக் குறைக்கப் போவதில்லை என்று, சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன உறுதியளித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுனர், தலைமைச் செயலர் பதவியேற்பு

வடக்கு மாகாண சபையின் புதிய தலைமைச் செயலராக சிறிலங்கா நிர்வாக சேவையின் முதற்தர அதிகாரியான ஏ.பத்திநாதன் இன்று காலை  பதவியேற்றுக் கொண்டார்.

ஐ.நா அறிக்கை தாமதமாகலாம் என தமிழ்மக்கள் அச்சம் – பிரித்தானிய அமைச்சரிடம் சி.வி எடுத்துரைப்பு

ஐ.நா நடத்தும் போர்க்குற்ற விசாரணையின் அறிக்கை வெளியாவது தாமதமாகலாம் என்று தமிழ்மக்கள் அச்சம் கொண்டுள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார இணை அமைச்சர் ஹியூகோ சுவைரிடம், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமராட்சியில் வாக்களிப்பு நிலையம் அருகே கைக்குண்டு வீச்சு – மக்களை அச்சுறுத்த முயற்சி

வடமராட்சியில் வாக்காளர்கள் வாக்களிப்பதை தடுக்கும் நோக்கில், சிறிலங்காப் படையினர் எனக் கருதப்படுவோரால் கைக்குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

தன்னைப் பிசாசு என்று யாழ்ப்பாணத்தில் ஒப்புக்கொண்டார் மகிந்த

தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசான  தனக்கு ஆதரவளிக்குமாறு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச  தமிழ்மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

மக்களுக்கான இயக்கமாகக் கூட்டுறவுத்துறை மாற்றம் பெறவேண்டும் – வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் பொ.ஐங்கரநேசன்

சிறிலங்கா மத்தியஅரசின் தலையீடுகள் இல்லாமல் வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடிய வகையில் மாகாண அரசின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள ஒரேயொரு துறையாக இன்று வடக்கு மாகாண சபைக்கு இருப்பது கூட்டுறவுத்துறைதான்.

ஈபிஆர்எல்எவ் பத்மநாபா அணியும் மைத்திரிக்கு ஆதரவு

சிறிலங்கா அதிபர் தேர்தலில், எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு அளிக்க தீர்மானித்துள்ளதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா அணி) அறிவித்துள்ளது.

உரிமைகளுக்காக அடிபணியத் தயாரில்லை – முதல்வர் விக்னேஸ்வரன்

அரசியல் ரீதியாக அடிபணிந்து எமது உரிமைகளைப் பெற நாங்கள் தயாராக இல்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.