மேலும்

செய்தியாளர்: யாழ்ப்பாணச் செய்தியாளர்

யாழ். பொங்கல் விழாக்களில் பங்கேற்காமல் நழுவிய கூட்டமைப்பு

சிறிலங்கா அரசாங்கத்தின் ஏற்பாட்டில், நேற்று யாழ்ப்பாணத்தில் நடந்த தேசிய பொங்கல் விழாவில் பங்கேற்காமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் நழுவிக் கொண்டுள்ளனர்.

நல்லிணக்கம், பொறுப்புக்கூறலுக்கு பிரித்தானியா உதவும் – பொங்கல் விழாவில் ஹியூகோ ஸ்வைர்

நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் உள்ளிட்ட சிறிலங்காவின் முயற்சிகளுக்கு பிரித்தானியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று, பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வைர் தெரிவித்தார்.

தைப்பொங்கலுடன் முடிவுக்கு வந்த பனிப்போர்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும், ஒருவருக்கொருவர் முகம்கொடுக்காத- கடந்த சில மாதங்களாக நிலவி வந்த பனிப்போர், நேற்று முடிவுக்கு வந்தது.

வடக்கில் தமிழர்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழவில்லை – முதலமைச்சர் குற்றச்சாட்டு

சிறிலங்காவில் ஆட்சிமாற்றத்துக்குப் பின்னரும் வடக்கு மாகாணத்திலும் தமிழர்கள் வாழ்விலும் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழவில்லை என்று பட்டியல் போட்டுச் சுட்டிக்காட்டியுள்ளார் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

மூத்த தமிழ் இதழாசிரியர் இரத்தினசிங்கம் யாழ்ப்பாணத்தில் காலமானார்

இலங்கைத் தமிழ் ஊடகத்துறையின் மூத்த இதழாசிரியரான- கே.கே.ஆர் என அழைக்கப்படும், கந்தர் இரத்தினசிங்கம் (வயது 87) இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.

தையிட்டியில் இரகசிய வதைமுகாம்

சிறிலங்கா இராணுவத்தின் பிடியில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட தையிட்டிப் பகுதியில் வீடு ஒன்று, இரகசிய வதைமுகாமாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

வலி.வடக்கில் 700 ஏக்கர் காணிகளை விடுவிக்க முடிவு – பொங்கலுக்கு முன் மீள்குடியேற்றம்

வலி.வடக்கு பிரதேசத்தில் சிறிலங்கா படையினர் வசம் உள்ள 700 ஏக்கர் காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் தெரிவித்தார்.

சித்தார்த்தனிடம் விளக்கம் கேட்க கோருகிறார் மாவை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனுமதியின்றி, தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் பங்கெடுத்தது குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்று, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசுக் கட்சிக்கு அழைப்பு இல்லை – நிபுணர் குழுவில் இடம்பெற்றது எப்படி?

அரசியல் தீர்வுத் திட்டத்தை உருவாக்குவதற்கு தமிழ் மக்கள் பேரவை உருவாக்கியுள்ள நிபுணர் குழுவில் தமிழ் அரசுக் கட்சி சார்பில் இருவர் இடம்பெற்றுள்ள போதிலும், இந்தப் பேரவையில் இணைந்து கொள்ள தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று அந்தக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

அரசியல் தீர்வுத் திட்டத்தை தயாரிக்கும் உபகுழுவில் இடம்பெற்றுள்ள 15 பேர் விபரம்

தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான அரசியல் தீர்வுத் திட்ட ஆவணத்தை தயாரிக்க 15 பேர் கொண்ட உபகுழுவொன்றை தமிழ் மக்கள் பேரவை நியமித்துள்ளது.