வட மாகாணசபைக்கு தனியான தேசிய கீதமா? – அவைத் தலைவர் நிராகரிப்பு
வடக்கு மாகாணசபை தனியான தேசிய கீதம் ஒன்றை இயற்றவுள்ளதாக, சிங்கள நாளிதழான, திவயின நேற்றுமுன்தினம் வெளியிட்டிருந்த செய்தியை வடமாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் நிராகரித்துள்ளார்.
வடக்கு மாகாணசபை தனியான தேசிய கீதம் ஒன்றை இயற்றவுள்ளதாக, சிங்கள நாளிதழான, திவயின நேற்றுமுன்தினம் வெளியிட்டிருந்த செய்தியை வடமாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் நிராகரித்துள்ளார்.
ஊர்காவற்றுறை- நாரந்தனையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை அணியினர் மீது தாக்குதல் நடத்தி, இருவரைப் படுகொலை செய்து, 18 வரையானோரைக் காயப்படுத்திய, ஈபிடிபியினர் மூவருக்கு யாழ்.மேல் நீதிமன்றம் இன்று இரட்டை மரணதண்டனை விதித்துள்ளது.
மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வடக்கு மாகாணசபையில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. கைதடியில் உள்ள வடக்கு மாகாணசபையின் அவையில் இன்று நடந்த அமர்வின் தொடக்கத்தில் ஈழத்தமிழ் மக்களின் சார்பில், சபை உறுப்பினர்கள் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 62 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இன்று நண்பகல் யாழ். பல்கலைக்கழகத்தில், சிறப்பு நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.
தமிழீழ தாயக விடுதலைக்காய் உயிர் நீத்த மாவீரர்களை நினைவு கூரும் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு, யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று நினைவு வணக்க நிகழ்வு இடம்பெற்றது.
வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவரான சி.தவராசாவை அந்தப் பதவியில் இருந்து நீக்குமாறு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலருக்கு, ஈபிடிபியின் பொதுச்செயலரான டக்ளஸ் தேவானந்தா கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாழ்ப்பாணத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக, ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில் எட்டுப் பேர் வரையில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணத்தில் ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் ஆறு பேரை கைது செய்திருப்பதாக, சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் பதவிக்கு சி.வி.விக்னேஸ்வரனை முன்னிறுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த முடிவு இன்றைக்கும் சரியானதே, என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கமாட்டேன் என்று, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முன்பாக, பொது அரங்கில் உறுதியளித்துள்ளார் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.