மேலும்

செய்தியாளர்: யாழ்ப்பாணச் செய்தியாளர்

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் நல்லூரில் அடையாள உண்ணாவிரதம்

வவுனியாவில் இன்று நான்காவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ள காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் தூதரக சேவைப் பணியகம் யாழ்ப்பாணத்தில் திறப்பு

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் தூதரக சேவைப் பணியகம், இன்று காலை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில், திறந்து வைக்கப்பட்டது.

உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்திய வழக்கு – சந்தேக நபரின் ஒப்புதல் வாக்குமூலம் நிராகரிப்பு

ஆனையிறவு அருகே, கொம்படி வெளியில் சிறிலங்கா விமானப்படையின் எம்.ஐ- 24 தாக்குதல் உலங்கு வானூர்தியை சுட்டு வீழ்த்தி, 4 விமானப்படை அதிகாரிகளுக்கு  மரணத்தை விளைவித்தார் என்று குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் புலி உறுப்பினரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை யாழ். மேல்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ஏறுதழுவுதல் ஆதரவு போராட்டத்தில் பங்கேற்று திரும்பிய மாணவன் விபத்தில் பலி

கிளிநொச்சியில் நேற்றுமாலை நடந்த ஏறுதழுவுதல் தடைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று விட்டுத் திரும்பிய ஊடகத்துறை மாணவன் விபத்து ஒன்றில் சிக்கி மரணமானார்.

யாழ்ப்பாணத்திலும் ஏறுதழுவுதலுக்கு ஆதரவான போராட்டம் – ஒளிப்படங்கள்

தமிழரின் பாரம்பரிய வீர விளையாட்டான ஏறுதழுவுதலுக்கு (ஜல்லிக்கட்டு)  விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி தமிழ்நாடு எங்கும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், அதற்கு ஆதரவாக யாழ்ப்பாணத்திலும், கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.

வல்வெட்டித்துறை வானில் பறந்த வித்தியாசமான உருவங்கள் – காட்சிகளில் பட்டப்போட்டி

தமிழர் திருநாளான தைப்பொங்கலை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் நேற்றுமாலை நடத்தப்பட்ட பட்டப் போட்டியில் வித்தியாசமான உருவங்களில் தயாரிக்கப்பட்ட பட்டங்கள் வானத்தில் பறக்கவிடப்பட்டன.

ஊறணியில் 400 மீற்றர் கடற்கரைப் பகுதியில் மீன்பிடிக்க அனுமதி

வலிகாமம் வடக்கில், காங்கேசன்துறைக்கும் மயிலிட்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள ஊறணி பகுதியில் உள்ள 400 மீற்றர் நீளமான கடற்கரைப் பகுதியை, மட்டுப்படுத்தப்பட்டளவில் மீனவர்கள் பயன்படுத்த சிறிலங்கா படையினர், நேற்று அனுமதி அளித்துள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 32 ஆவது பட்டமளிப்பு விழா

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 32 ஆவது பட்டமளிப்பு விழா நேற்று ஆரம்பமாகி, இன்றும் இடம்பெற்று வருகிறது. யாழ். பல்கலைக்கழக வேந்தர் சி.பத்மநாதன் தலைமையில் நேற்றுக்காலை 9 மணியளவில் முதல் அமர்வாக படடமளிப்பு விழா இடம்பெற்றது.

அபிவிருத்தி சிறப்பு ஒழுங்குகள் சட்டமூலத்தை வடக்கு மாகாணசபை நிராகரிப்பு

சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருந்த அபிவிருத்தி சிறப்பு ஒழுங்குகள் சட்டமூலத்தை, வடக்கு மாகாணசபை இன்று ஒருமனதாக நிராகரித்துள்ளது.

சாவகச்சேரி கோர விபத்தில் 10 பேர் பலி – 20 பேர் காயம்

சாவகச்சேரியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில், தென்னிலங்கையில் இருந்து நயினாதீவுக்கு யாத்திரை சென்ற 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர்.