மேலும்

செய்தியாளர்: யாழ்ப்பாணச் செய்தியாளர்

கைது செய்யப்பட்டவர்கள் எங்கே என கேட்டவர்களுக்கு மரணச்சான்று தருவதாக கூறிய அரச தரப்பு

நாவற்குழியில் சிறிலங்கா இராணுவத்தினரின் சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களை, மன்றில் முன்னிலைப்படுத்தக் கோரி, ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்த உறவுகளுக்கு, மரணச் சான்றிதழ் தரமுடியும் என்று அரச தரப்பு சட்டவாளர் பதிலளித்துள்ளார்.

முழு அடைப்பு போராட்டத்தினால் முற்றாக முடங்கியது வடக்கு மாகாணம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்க வலியுறுத்தும் வகையில், இன்று முன்னெடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டத்தினால், வடக்கு மாகாணம் முழுவதும், இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.

ஜெனிவாவின் கவனத்தை ஈர்க்க இன்று முழு அடைப்பு போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அழைப்பின் பேரில் வடக்கில் இன்று முழு அடைப்புப் போராட்டம் – அனைத்துத் தரப்புகளினதும் ஆதரவுடன் முன்னெடுக்கப்படவுள்ளது.

சிறிலங்கா காவல்துறையினரின் தாக்குதலில் யாழ். ஊடகவியலாளர் காயம்

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் ஒருவர் சிறிலங்கா காவல்துறை அதிகாரி ஒருவரால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

படுகொலைகள் பற்றிய ஆவணத்தை வெளியிடவில்லை – விக்னேஸ்வரன் மறுப்பு

யாழ்ப்பாணத்தில், நடந்த ஈபிஆர்எல்எவ் மாநாட்டில், எந்த ஆவணத்தையும் தான்  வெளியிடவில்லை என்று,  தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம், சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் படுகொலைகளுக்கு நீதி கோரி யாழ். நகரில் போராட்டம்

திருகோணமலையில் 2006ஆம் ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 13ஆவது நினைவு நாளான இன்று, யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

சேறு பூசக் காத்திருக்கும் ஊடகங்கள் – கட்சியினருக்கு விக்னேஸ்வரன் எச்சரிக்கை

தமிழ் மக்கள் கூட்டணி மீது சேறு பூச சில ஊடகங்கள் காத்திருப்பதாகவும், இவை குறித்து அவதானமாக இருக்க வேண்டும் என்று அந்தக் கட்சியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பை பிளவுபடுத்தும் நோக்கம் இல்லை – விக்னேஸ்வரன்

தமிழ்த் தேசியக் கூட்டணியை பிளவுபடுத்தும் நோக்கம் தனக்குக் கிடையாது என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்.னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வீணாகும் இரணைமடு நீர் யாழ். குடிநீர் தேவைக்கு – திட்டம் தயாரிக்க ஆளுனர் உத்தரவு

இரணைமடு குளத்தில் இருந்து வீணாக கடலில் கலக்கும் நீரை, யாழ்ப்பாணக் குடாநாட்டின் குடிநீர்த் தேவைக்குப் பயன்படுத்துவதற்கான செயற்திட்டத்துக்கான முன்மொழிவு ஒன்றைச் சமர்ப்பிக்குமாறு, வடக்கு மாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் உத்தரவிட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி அமைச்சை உருவாக்க ரணில் இணக்கம்

வடக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சின் பெயரை, வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சு என்று பெயர் மாற்றம் செய்வதற்கு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.