யாழ். கடலேரியில் படகு கவிழ்ந்து 6 மாணவர்கள் பலி
யாழ்ப்பாணக் கடலேரியில் மண்டைதீவை அண்டிய சிறுத்தீவு பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற படகு விபத்தில் உயர்தர வகுப்பு மாணவர்கள் ஆறு பேர் உயிரிழந்தனர்.
யாழ்ப்பாணக் கடலேரியில் மண்டைதீவை அண்டிய சிறுத்தீவு பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற படகு விபத்தில் உயர்தர வகுப்பு மாணவர்கள் ஆறு பேர் உயிரிழந்தனர்.
சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்புத் திருத்த வரைவுக்கு, வடக்கு மாகாணசபை ஆதரவு அளிப்பதற்கு வாய்ப்பில்லை என்று முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணசபையின் புதிய அமைச்சர்களாக மருத்துவ கலாநிதி ஜி.குணசீலன் மற்றும் சிவநேசன் ஆகியோர் இன்று பிற்பகல் பதவியேற்றனர்.
வடக்கு மாகாணசபையின் புதிய அமைச்சர்களாக, மருத்துவ கலாநிதி ஜி.குணசீலன் மற்றும் சிவநேசன் ஆகியோர் நியமிக்கப்படவுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்தப்பட்ட தேடுதலின் போது, நுழைவிசைவு விதிமுறைகளை மீறி தங்கியிருந்த 27 இந்தியர்களை சிறிலங்காவின் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் தேர்த் திருவிழா இன்று காலை இலட்சக்கணக்கான அடியார்கள் புடைசூழ மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
இந்தியாவின் தென்பிராந்திய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் பி.எம்.ஹரிஸ் இன்று கோப்பாயில் அமைந்துள்ள இந்திய இராணுவ அதிகாரியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று குற்றச்சாட்டில், ஆவா குழுவின் உறுப்பினர் என்று சந்தேகிக்கப்படும் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.
கொக்குவிலில் இரண்டு சிறிலங்கா காவல்துறையினர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்ட குழுவைச் சேர்ந்த மற்றொருவரையும் நேற்று கைது செய்திருப்பதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.
வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து மருத்துவ கலாநிதி சத்தியலிங்கம் விலகியுள்ளார். வடக்கு மாகாண அமைச்சரவையில் பங்கேற்பதில்லை என்று தமிழ் அரசுக் கட்சி எடுத்துள்ள முடிவுக்கு அமைய அவர் தனது பதவி விலகல் கடிதத்தை முதலமைச்சர். சி.வி.விக்னேஸ்வரனுக்கு நேற்றுமாலை அனுப்பி வைத்தார்.