மேலும்

செய்தியாளர்: யாழ்ப்பாணச் செய்தியாளர்

தமிழ்நாட்டு பக்தர்கள் வராததால் களையிழந்த கச்சதீவு திருவிழா

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இன்று ஆரம்பமாகியது. இந்தியாவில் இருந்து பக்தர்களோ, குருமாரோ வருகை தராதததால், இந்த திருவிழா களையிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலாலி ஓடுபாதை விரிவாக்க ஆவணத்தில் ஒப்பமிடவில்லை – விக்னேஸ்வரன்

பலாலி விமான நிலைய ஓடுபாதையை விரிவாக்குவது தொடர்பான எந்தவொரு ஆவணத்திலும் தான் ஒப்பமிடப் போவதில்லை என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் முதலாவது கலப்பு மின்திட்டம் எழுவைதீவில் திறப்பு

சிறிலங்காவின் முதலாவது கலப்பு மின்திட்டம் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள எழுவைதீவில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை திறந்து வைத்தார்.

யாழ். போராட்டத்தைப் படம் பிடித்த சிறப்புப் படைப்பிரிவு அதிகாரி

யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் அருகே நேற்று நடத்தப்பட்ட கருப்புக் கொடி ஏந்திய கவனயீர்ப்புப் போராட்டத்தை சிறிலங்கா இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவை சேர்ந்த ஒருவர் காணொளிப்படம் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.

சுமந்திரன் கொலை முயற்சி – ஐந்தாவது சந்தேகநபர் மன்னாரில் கைது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்ய முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில், மற்றொரு சந்தேக நபர் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்துக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நேற்று அறிவித்துள்ளனர்.

நயினாதீவில் புதிய புத்தர் சிலை – பலப்படுத்தப்படும் பௌத்த அடையாளங்கள்

நயினாதீவில் பெளத்த சின்னங்களை அதிகரித்து, பௌத்த மத அடையாளங்களைப் பலப்படுத்தும் நடவடிக்கையில் சிறிலங்கா கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

காணாமற்போனோருக்கான பணியகம் விரைவில் உருவாக்கப்படும்- மங்கள சமரவீர

காணாமற்போனோர் பணியகத்தை நிறுவும் செயற்பாடுகளை சிறிலங்கா அரசாங்கம் விரைவாக முன்னெடுக்கும் என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் நல்லூரில் அடையாள உண்ணாவிரதம்

வவுனியாவில் இன்று நான்காவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ள காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் தூதரக சேவைப் பணியகம் யாழ்ப்பாணத்தில் திறப்பு

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் தூதரக சேவைப் பணியகம், இன்று காலை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில், திறந்து வைக்கப்பட்டது.

உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்திய வழக்கு – சந்தேக நபரின் ஒப்புதல் வாக்குமூலம் நிராகரிப்பு

ஆனையிறவு அருகே, கொம்படி வெளியில் சிறிலங்கா விமானப்படையின் எம்.ஐ- 24 தாக்குதல் உலங்கு வானூர்தியை சுட்டு வீழ்த்தி, 4 விமானப்படை அதிகாரிகளுக்கு  மரணத்தை விளைவித்தார் என்று குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் புலி உறுப்பினரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை யாழ். மேல்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.