மேலும்

செய்தியாளர்: யாழ்ப்பாணச் செய்தியாளர்

துயிலுமில்லங்களில் வேண்டாம் அரசியல் – மாவீரர் குடும்பங்களின் சார்பில் கோரிக்கை

மாவீரர் நாளன்று மாவீரர் துயிலுமில்லங்களில், பிரதான சுடரை  மாவீரர் ஒருவரின் மனைவி, கணவன், பெற்றோர் அல்லது பிள்ளைகள் மட்டுமே ஏற்ற வேண்டும் என்று மாவீரர் குடும்பங்கள் சார்பில், முன்னாள் போராளியும், மாவீரரின் தந்தையுமான பசீர் காக்கா எனப்படும், முத்துக்குமாரு மனோகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திறன்மிக்க ஆளுமைகளை மக்கள் பிரதிநிதிகளாக உருவாக்குவதில் தமிழ் மக்கள் பேரவை ஆர்வம்

தமிழ்ச் சமூகத்தின் அரசியல், நிர்வாக அடிப்படைக் கட்டுமானங்களைப் பலப்படுத்துவதன் மூலம் தமிழ்த் தேசியப் பற்றுறுதி கொண்ட, திறன்மிக்க ஆளுமைகளை மக்கள் பிரதிநிதிகளாக உருவாக்குவதற்கான வழிமுறைகளையும் கலந்துரையாடல்களையும் ஆரம்பித்திருப்பதாக தமிழ்மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.

வடக்கில் கடும் மழைக்கு வாய்ப்பு – தயார் நிலையில் அதிகாரிகள்

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள வளிமண்டலக் குழப்பத்தினால், சிறிலங்காவின் வடக்குப் பகுதியில் மிகக் கடுமையான மழையும் கடும் காற்றும் இருக்கும் என்று சிறிலங்கா வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

அடுத்த கட்டத் தலைமைக்கு வழி விட வேண்டும் – விக்னேஸ்வரன்

அடுத்த கட்ட இளம் தலைமை அடையாளப்படுத்தப்பட்டு, அதிகாரத்தில் அமர்த்தப்பட்டு, போதிய அரசியல் அறிவு மற்றும் அனுபவத்தைப் பெறுவதற்கு, அறுபது வயதைக் கடந்த தமிழ்த் தலைமைகள்,  இடமளிக்க வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை

தமிழ் மக்கள் பேரவை இன்று யாழ்ப்பாணத்தில் முக்கிய கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளது. வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட மூன்று இணைத்தலைவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், உள்ளூராட்சித் தேர்தல் மற்றும் இடைக்கால அறிக்கை தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது.

பலாலி படைத்தள நுழைவாயிலுக்கு முன்பாக பெருமளவு மக்கள் போராட்டம்

பலாலி படைத்தளக் குடியிருப்பு வளாக (cantonment) நுழைவாயிலுக்கு முன்பாக, வலி.வடக்குப் பகுதி மக்கள் நேற்று பெரியளவிலான போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

ஈபிஆர்எல்எவ் பிரிந்து செல்வதால் தமிழ் அரசுக் கட்சிக்கு பாதிப்பு இல்லை – சிவிகே

தமிழ் அரசுக் கட்சியுடனான உறவுகளை முறித்துக் கொள்ளும் முடிவை எடுத்த, ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்காக வருத்தப்படுவதாக வட மாகாணசபையின் அவைத் தலைவரும், தமிழ் அரசுக் கட்சியின் பிரமுகருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசுக் கட்சியுடனான உறவுகளை முறித்துக் கொண்டது ஈபிஆர்எல்எவ்

தமிழ் அரசுக் கட்சியுடன் இனிமேல் இணைந்து செயற்படப் போவதில்லை என்றும், அதன் சின்னத்தில் போட்டியிடப் போவதில்லை என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஈபிஆர்எல்எவ் தெரிவித்துள்ளது.

அரியாலை படுகொலைக்கான காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை

அரியாலை கிழக்கு- மணியம்தோட்டம் பகுதியில் இளைஞன் ஒருவரைச் சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ள போதிலும், இந்தக் கொலைக்கான காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை என்று சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அரியாலை படுகொலை – இரண்டு சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் கைது

அரியாலை கிழக்கு, மணியந்தோட்டம் பகுதியில் இளைஞன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் உள்ளிட்ட இரண்டு பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.