சிறிலங்கா அரசில் புத்தரோ, காந்தியோ இல்லை- மனோ கணேசன்
சிறிலங்கா அரசுடன் உடன்பாடுகளைச் செய்து பயனில்லை. ஏனென்னில், உடன்படிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கத்தில் கெளதம புத்தர்களோ, மகாத்மா காந்திகளோ இல்லை என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
சிறிலங்கா அரசுடன் உடன்பாடுகளைச் செய்து பயனில்லை. ஏனென்னில், உடன்படிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கத்தில் கெளதம புத்தர்களோ, மகாத்மா காந்திகளோ இல்லை என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்தில் மூன்று பத்தாண்டுகளாக சிறிலங்கா இராணுவத்தினரின் வசமிருந்த பொதுமக்களின், 683 ஏக்கர் காணிகள் நேற்று உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன.
வடக்கு மாகாண பதில் முதலமைச்சராக, கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் நேற்று பதவியேற்றுள்ளார்.
வடக்கு மாகாண சபை அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள புதிய மோசடிக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை நடத்துமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு, வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த உடன்பாட்டிலும் கையெழுத்திடவில்லை என்று கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
பருத்தித்துறை பிரதேச சபைத் தவிசாளர் பதவிக்கு போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருக்கு, ஈபிடிபி, ஐதேக, சிறிலங்கா பொது ஜன முன்னணி என்பன ஆதரவு அளித்துள்ளன.
வடமராட்சி தெற்கு மேற்கு (கரவெட்டி) பிரதேச சபைகயில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவிசாளர் பதவியைக் கைப்பற்றி ஆட்சியமைத்துள்ளது.
வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளராக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னிறுத்திய சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் போராளிகளின் மீள்குடியமர்வு, அவர்களுக்கான இலகு கடன்கள், வாழ்வாதார உதவித் திட்டங்களை வடக்கு மாகாண சபையுடன் இணைந்து சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்று சிறிலங்கா நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிடம், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறிலங்கா நிதி அமைச்சர் மங்கள சமரவீரவும், மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரரசுவாமியும் இன்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.