மேலும்

செய்தியாளர்: யாழ்ப்பாணச் செய்தியாளர்

சிறிலங்கா அதிபருடன் சந்திப்பு நடந்ததா? – அருட்தந்தை சக்திவேல் விளக்கம்

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை சிறிலங்கா அதிபர் சந்திக்கவில்லை என்று கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை நிராகரித்து- அதிபரின் ஊடகப் பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பை நிராகரித்துள்ளார், அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல்.

ஆலயக் குருக்களைக் கொன்ற சிறிலங்கா இராணுவ சிப்பாய், புலனாய்வாளர்கள் 3 பேருக்கு மரணதண்டனை

சங்கானையில் ஆலயக் குருக்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று,  அவரது பிள்ளைகளைக் காயப்படுத்தி, நகைகள் மற்றும் உந்துருளியைக் கொள்ளையிட்ட சிறிலங்கா இராணுவச் சிப்பாய் ஒருவர் மற்றும் இரண்டு இராணுவப் புலனாய்வாளர்களுக்கு யாழ். மேல்நீதிமன்றம் இன்று மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

அரசியல் கைதி ஆனந்தசுதாகருக்கு பொதுமன்னிப்பு அளிக்குமாறு சிறிலங்கா அதிபரிடம் விக்கி கோரிக்கை

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதி, ஆனந்தசுதாகருக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அனைத்துலக சமூகம் எம்மைக் கைவிட முடியாது – சம்பந்தன்

ஜெனிவா தீர்மானத்தை சிறிலங்கா அரசு நிறைவேற்றாவிடின், அனைத்துலக சமூகம்  என்ன செய்யப்போகின்றது என்று சொல்ல வேண்டும்.  எமது மக்களை அனைத்துலக சமூகம் கைவிட்டு விட முடியாது என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்  தெரிவித்தார். 

யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா அதிபருக்கு எதிராகப் போராட்டம்

யாழ்ப்பாணத்துக்கு இன்று பயணம் மேற்கொண்ட சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

யாழ். மாநகரசபை ஆசனப் பிரச்சினை – உலக வங்கி உதவியுடன் தீர்வு

யாழ்ப்பாண மாநகர சபையின் ஆசனப் பிரச்சினை உலக வங்கியின் உதவியுடன் தீர்வு காணப்பட்டுள்ளது. கடந்த மாதம் நடந்த தேர்தலில், புதிதாக தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் இந்த எதிர்வரும் 20ஆம் நாள் ஆரம்பமாகவுள்ளது.

தமிழ் அரசுக் கட்சியை ஆதரித்தால் கடும் நடவடிக்கை – ஆனந்தசங்கரி எச்சரிக்கை

உள்ளூராட்சி சபைகளில் எந்தக் காரணத்தைக் கொண்டும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு ஆதரவளிக்கக் கூடாது என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச்செயலர் வீ.ஆனந்தசங்கரி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி  சபை உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

35 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் உயிர்த்தது ‘சுதந்திரன்’

தந்தை செல்வாவினால் ஆரம்பிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அதிகாரபூர்வ இதழான ‘சுதந்திரன்’, 35 ஆண்டுகளுக்குப் பின்னர் ‘புதிய சுதந்திரன்’ என்ற பெயரில் மீண்டும் வெளிவரத் தொடங்கியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நெல்சன் மண்டேலாவுக்குச் சிலை

கறுப்பின மக்களின் விடுதலைக்காகப் போராடியவரும், தென்னாபிரிக்காவின் முன்னாள் அதிபருமான நெல்சன் மண்டேலாவின் உருவச் சிலை யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவுள்ளது.

முகமாலையில் இளவரசர் மிரெட் அல் ஹுசேன்

கண்ணிவெடிகளைத் தடைசெய்யும் அனைத்துலக பிரகடனத்தின் சிறப்பு தூதுவரான இளவரசர் மிரெட் ராட் அல் ஹுசேன் முகமாலைக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.