மேலும்

செய்தியாளர்: இந்தியச் செய்தியாளர்

பலாலி விமான நிலையத்தை விரிவாக்க இந்தியா உதவி – விமானப்படைக் குழுவை அனுப்புகிறது

பலாலி விமானப்படைத் தளத்தை  சிவில் விமான நிலையமாக விரிவாக்குவதற்கும், காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கும் உதவிவழங்க  இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.

தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்ற சிறிலங்காவிடம் அமைதியாக அழுத்தம் கொடுத்தாராம் சுஸ்மா

சிறிலங்காவின் புதிய அரசியலமைப்பு, இலங்கைத் தீவின் சிறுபான்மையினரான தமிழ் மக்களின் அபிலாசைகளை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்று  புதுடெல்லி எதிர்பார்ப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், சிறிலங்கா அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் உரிமைப் பிரச்சினையை கைவிட்டது இந்தியா – இந்திய ஊடகம்

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜின் சிறிலங்கா பயணத்தின் முடிவில் நேற்று வெளியிடப்பட்டுள்ள, கூட்டறிக்கையில், இந்தியா தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த தமிழ்மக்களின் அரசியல் உரிமைகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று வடஇந்திய மாநிலங்களில் இருந்து வெளியாகும், தி ரிபியூன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

விமானந்தாங்கி கப்பலை கொழும்புக்கு அனுப்பியது ஏன்? – இந்திய கடற்படை விளக்கம்

சீனப் போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகள் சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணங்களே இந்தியக் கடற்படையின் விமானந்தாங்கிப் போர்க்கப்பலான ஐ.என்எஸ் விக்கிரமாதித்யாவை, கொழும்புத் துறைமுகத்தில் நிறுத்துவதற்கு, தூண்டுதலாக அமைந்தது என்று இந்தியக் கடற்படை தெரிவித்துள்ளது.

சிறிலங்காவில் துறைமுகம் அமைக்கும் சீனாவின் முயற்சி – அமெரிக்க, இந்திய தளபதிகள் ஆலோசனை

சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளில், தனது துறைமுகங்களை உருவாக்கும் சீனாவின் திட்டம் தொடர்பாக, அமெரிக்க- இந்தியக் கடற்படைத் தளபதிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

பதான்கோட் விமானப்படைத் தளத்தில் சிறிலங்கா விமானப்படை விமானிகளும் இருந்தனர்

பதான்கோட் விமானப்படைத் தளம் மீது, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய போது, சிறிலங்கா விமானப்படை விமானிகளும் அங்கு தங்கியிருந்ததாக, தகவல் வெளியிட்டுள்ளார் இந்திய இராணுவத்தின் மேற்குப் பிராந்திய கட்டளை பணியக தளபதி லெப்.ஜெனரல் கே.ஜே.சிங்.

இந்தியாவுடன் மறுப்பு, பாகிஸ்தானுடன் இணக்கம் – சிறிலங்காவின் முடிவினால் புதுடெல்லி அதிர்ச்சி

பாகிஸ்தானுடன், சிறிலங்கா செய்து கொள்ளவுள்ள சுதந்திர வர்த்தக உடன்பாட்டில், “சேவைகள்” துறையை உள்ளடக்க இணங்கியுள்ளது இந்தியாவுக்கு அ்திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் போர் விமானங்களை வாங்கவில்லை – சிறிலங்கா விமானப்படை மறுப்பு

பாகிஸ்தானிடம் இருந்து. ஜே.எப்-17 போர் விமானங்களை வாங்கும் உடன்பாட்டில் சிறிலங்கா அரசாங்கம் கையெழுத்திட்டிருப்பதாக, இந்திய, பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியான செய்திகளை சிறிலங்கா விமானப்படை நிராகரித்துள்ளது.

கொச்சி துறைமுகத்தில் சிறிலங்காவின் போர்க்கப்பல்கள்

சிறிலங்கா கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்கள் இந்தியாவின் கொச்சி துறைமுகத்துக்கு மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டுள்ளன.

சிறிலங்காவின் புதிய அரசு பெறுமதிமிக்க பங்காளி – என்கிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

சிறிலங்காவின் புதிய அரசாங்கம், இந்தியாவின் பெறுமதிமிக்கதொரு பங்காளி என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.