மேலும்

செய்தியாளர்: இந்தியச் செய்தியாளர்

சிறிலங்கா கூட்டுப்படைகளின் தளபதி புதுடெல்லியில் – உயர்மட்டப் பேச்சுக்களுக்காக சென்றார்

இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் சிறிலங்காவின் கூட்டுப்படைகளின் தளபதி எயர் சீவ் மார்ஷல் கோலித குணதிலக இன்று புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

நுழைவிசைவு காலாவதியான 3,857 இலங்கையர்கள் இந்தியாவில் தங்கியுள்ளனர்

நுழைவிசைவு காலாவதியான பின்னரும், இந்தியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களின் பட்டியலில், இலங்கையர்கள் இரண்டாமிடத்தில் இருப்பதாக, இந்திய மத்திய உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் கால்வைக்கிறது இந்தியாவின் எக்சிம் வங்கி

இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி (எக்சிம் வங்கி) சிறிலங்காவில் விரைவில் கிளை ஒன்றை திறப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவின் நிலைமைகள் – இந்தியக் குடியரசுத் தலைவர் மகிழ்ச்சி

சிறிலங்காவின் தற்போதைய நிலைமைகள் குறித்து மகிழ்ச்சியடைவதாக, இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை, இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை, சிறிலங்காவின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, சந்தித்த போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பிரணாப் முகர்ஜியின் அதிரடி முடிவினால் இந்தியப் பயணத்தை கைவிட்டார் மைத்திரி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன புதுடெல்லிக்கு மேற்கொள்ளவிருந்த பயணம், இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் திடீர் முடிவினால் கைவிடப்பட்டுள்ளதாக, புதுடெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவுக்கு படைகளை அனுப்ப ராஜீவ் தனித்து முடிவெடுக்கவில்லை – சுப்பிரமணியன் சுவாமி

சிறிலங்காவுக்கு இந்தியப் படைகளை அனுப்பும் முடிவை ராஜீவ் காந்தி தனி ஒருவராக எடுக்கவில்லை என்று பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

சீனாவை அச்சுறுத்தலாக பார்க்க வேண்டாம்- புதுடெல்லியில் சந்திரிகா

சீனாவை அச்சுறுத்தலாக அன்றி, ஒரு வாய்ப்பாகவே பார்க்க வேண்டும், என்று புதுடெல்லியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க.

சந்திரிகா- சுஸ்மா புதுடெல்லியில் சந்திப்பு

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜை இன்று சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இந்தியாவின் சார்க் செய்மதித் திட்டத்தில் இணைய உறுப்பு நாடுகள் அச்சம் – சிறிலங்கா மட்டும் ஒப்புதல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்ட சார்க் செய்மதித் திட்டத்தில், இணைந்து கொள்ள சிறிலங்கா மட்டுமே இணக்கம் தெரிவித்துள்ளதாக ரைம்ஸ் ஒவ் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

ஆக்ராவில் இருந்து மாத்தறை வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்க இந்தியா திட்டம்

இந்தியாவின் ஆக்ராவில் இருந்து சிறிலங்காவின் மாத்தறை வரை தேசிய நெடுஞசாலை ஒன்றை அமைக்கும் புதிய திட்டத்தை இந்தியாவின் நெடுஞ்சாலைகள் மற்றும் தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.