மேலும்

செய்தியாளர்: இந்தியச் செய்தியாளர்

திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவிடம் கையளிக்க விரைவில் உடன்பாடு

இந்தியாவின் உதவியுடன் திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பான உடன்பாடு விரைவில் பூர்த்தி செய்யப்படும் என்று சிறிலங்காவின் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பாதுகாப்புக் கரிசனைகளை ஆபத்துக்குள்ளாக்கக் கூடாது – சரத் பொன்சேகா

சிறிலங்காவிலும், இந்தியப் பெருங்கடலிலும் இந்தியாவின் பாதுகாப்புக் கரிசனைகளை ஆபத்துக்குள்ளாக்கக் கூடாது என்று சிறிலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இந்திய- சிறிலங்கா கடலோரக் காவல்படை அதிகாரிகள் முக்கிய பேச்சு

கடல்சார் ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வது தொடர்பாக, இந்திய- சிறிலங்கா கடலோரக் காவல்படை உயர் அதிகாரிகள் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.

பண நெருக்கடி – விதிமுறையை தளர்த்துமாறு இந்திய அரசிடம் வெளிநாட்டு தூதரகங்கள் கோரிக்கை

வெளிநாட்டு சுற்றுப் பயணிகள் பணத்தைப் பெறுவதற்கு இருக்கும் கட்டுப்பாடுகளைத் தளர்த்துமாறு இந்திய அரசாங்கத்திடம் சிறிலங்கா உள்ளிட்ட பல வெளிநாட்டுத் தூதரகங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

சிறிலங்கா மாணவர்கள் இந்தியாவில் மருத்துவக் கல்வியை கற்க முடியாத நிலை

இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளில் சிறிலங்கா மாணவர்களை அனுமதிக்கும் விடயத்தில், தலையீடு செய்யுமாறு இந்திய வெளிவிவகார அமைச்சுக்கு சிறிலங்கா, ஈரான் ஆகிய நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

சிறிலங்காவுடன் சுதந்திர வர்த்தக உடன்பாட்டை விரிவுபடுத்த இந்தியா முயற்சி

சிறிலங்காவுடனான சுதந்திர வர்த்தக உடன்பாட்டை மேலும் விரிவுபடுத்துவது குறித்துப் பேச்சு நடத்துவதற்கு, இந்திய உயர் அதிகாரிகள் குழுவொன்று கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

கூட்டுப் பயிற்சி: இந்தியா – சிறிலங்கா இடையே விரைவில் புரிந்துணர்வு உடன்பாடு

கூட்டுப் பயிற்சிகளை நடத்துவது தொடர்பாக சிறிலங்காவுடன், இந்திய கடலோரக் காவல்படை புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்ளவுள்ளது. இந்திய கடலோரக் காவல்படை பணிப்பாளர் நாயகம் ராஜேந்திர சிங் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்தியக் கடற்படைத் தளபதி இன்று சிறிலங்கா பயணம்

இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பா இன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். வரும் வியாழக்கிழமை வரை அவர் கொழும்பில் தங்கியிருப்பார் என்று புதுடெல்லி செய்திகள் தெரிவிக்கின்றன.

பாக்கு நீரிணையில் கூட்டு ரோந்து – சிறிலங்காவின் திட்டத்தை பரிசீலிக்க இந்தியா இணக்கம்

பாக்கு நீரிணையில் இந்திய-சிறிலங்கா கடற்படைகள் கூட்டு ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்த சிறிலங்காவின் யோசனையை இந்தியா பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள இணங்கியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்தார் சிறிலங்கா அதிபர்

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று மாலை இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.