ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் இன்று கொழும்பு வருகிறார்
ரஷ்யாவின் எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் அனடோலியேவிச் மார்ஷவின் தலைமையிலான உயர்மட்ட ரஷ்யத் தூதுக்குழு இன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.
ரஷ்யாவின் எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் அனடோலியேவிச் மார்ஷவின் தலைமையிலான உயர்மட்ட ரஷ்யத் தூதுக்குழு இன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.
சிறிலங்காவிற்கான நிதி ஒதுக்கீட்டை 100 மில்லியன் டொலர்களால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக, ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாட்டோ கன்டா தெரிவித்துள்ளார்.
எரிசக்தி பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும், உச்ச பயன்பாட்டு நேரங்களில் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்த பரப்புரையை தீவிரப்படுத்துமாறும் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேற்காசிய மோதலின் பின்விளைவுகள் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித `ஹேரத்துடன் கலந்துரையாடியுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளதை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை, 6 மாதங்களுக்குப் பின் உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாட்டோ கன்டா (Masato Kanda) இன்று சிறிலங்காவுக்கு மூன்று நாள் அதிகாரபூர்வ பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
மின்சாரத்தையும் எரிபொருளையும் பொறுப்புடன் பயன்படுத்துமாறு சிறிலங்கா அரசாங்கம் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
அனைத்துலக சந்தையில் எண்ணெய் விலைகள் உயர்ந்ததைத் தொடர்ந்து, இரண்டு வாரங்களுக்குள் இரண்டாவது முறையாக எரிபொருள் விலைகளை சிறிலங்கா பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அதிகரித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இந்த விலை உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் குறித்து எந்தவொரு அனைத்துலக அமைப்பும் விசாரணை நடத்துவதை சிறிலங்கா அரசாங்கம் எதிர்ப்பதாக, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சிறிலங்கன் எயர்லைன்ஸ் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவிடம், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, அச்சுறுத்தலின் பேரில் வாக்குமூலம் பெற்றதாக, அவரது சட்டவாளர்கள் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் சத்தியக் கடதாசியை தாக்கல் செய்துள்ளனர்.