இறுதிக்கட்டத்தை எட்டுகிறது அதிபர் தேர்தல் – இன்றுடன் பரப்புரைகள் முடிவு
வரும் 8ம் நாள் நடக்கவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான பரப்புரைகள் யாவும், இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
வரும் 8ம் நாள் நடக்கவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான பரப்புரைகள் யாவும், இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான பரப்புரையில் இருந்து ஒதுங்கியுள்ள, அமைச்சர் மேர்வின் சில்வா, விரும்பிய யாருக்காவது வாக்களிக்கும்படி பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும் கூட, விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனை, மரியாதையாக திரு.பிரபாகரன் என்று அழைத்துள்ளார் என்று, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
அரச வளங்களின் பயன்பாடு மற்றும், இராணுவத் தலையீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கவலையடைந்துள்ளதாக, சிறிலங்கா அதிபர் தேர்தலைக் கண்காணிக்க வந்துள்ள, வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் குற்றச்சாட்டுகளை முறியடிப்பதற்கு, சரியான இடத்தில், சரியான நேரத்தில் பயன்படுத்துவதற்காகவே, விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளர் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனை பாதுகாப்பாக வைத்திருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன் இறக்குமதி தடை வரும் 15ம் நாள் நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த தடையை எதிர்கொள்ள சிறிலங்கா அரசாங்கம் தயாராக உள்ளதாக, சிறிலங்காவின் கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சர் சரத் குமார குணரத்ன தெரிவித்துள்ளார்.
வரும் வியாழக்கிழமை சிறிலங்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலைக் கண்காணிக்க வந்துள்ள வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் நேற்று தமது பணிகளை ஆரம்பித்துள்ளனர்.
சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும், இந்தவாரம் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பொலன்னறுவ, அரலகன்விலவில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பங்கேற்றிருந்த தேர்தல் பரப்புரைக் கூட்ட மேடை மீது இன்றிரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகோத்தாவுக்குள் நுழைந்து சிறிலங்கா காவல்துறையினர் தேடுதல்களை நடத்தியுள்ளனர்.