அடுத்தவாரம் சிறிலங்கா வருகிறார் பிரித்தானிய அமைச்சர்
பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகத்தின், ஆசிய, பசுபிக் பிராந்திய விவகாரங்களுக்கான அமைச்சர் அலோக் சர்மா அடுத்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகத்தின், ஆசிய, பசுபிக் பிராந்திய விவகாரங்களுக்கான அமைச்சர் அலோக் சர்மா அடுத்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
கொலன்னாவ- மீதொட்டமுல்லவில் உள்ள குப்பைமேடு சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. நேற்றுமுன்தினம் பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் பெருமளவு வீடுகள் குப்பை மேட்டின் கீழ் புதைந்து போயின.
கொலன்னாவ- மீதொட்டமுல்லவில் நேற்று பிற்பகல் குப்பை மேடு சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்தார்.
சிறிலங்காவின் விவசாயத் துறையை நவீன மயப்படுத்தவதற்கும், நல்லிணக்க செயல்முறைகளை வலுப்படுத்துவதற்கும், 42 மில்லியன் யூரோவை ஐரோப்பிய ஒன்றியம் உதவியாக வழங்க முன்வந்துள்ளது.
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 2008 ஆம் ஆண்டு 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான, கடற்படை அதிகாரியைக் கைது செய்வதற்கு சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில் தேடுதல் நடத்துமாறு, கோட்டே நீதிவான் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜப்பானுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். வரும் ஏப்ரல் 10ஆம் நாள் தொடக்கம், 16ஆம் நாள் வரை சிறிலங்கா பிரதமர் ஜப்பானில் தங்கியிருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை- சீனக்குடாவில் உள்ள எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்கி, கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க அனைத்துலக விமான நிலையத்தின் விரிவாக்கப்பட்ட ஓடுபாதை இன்று திறந்து வைக்கப்படவுள்ளது. இதையடுத்து, கடந்த மூன்று மாதங்களாக சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்த விமான நிலையம் வழமைக்குத் திரும்பவுள்ளது.
சர்ச்சைக்குரிய விசாரணைகளில் இருந்து சிறிலங்கா இராணுவத்தினருக்கு விலக்கு அளிக்க முடியாது என்று சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் பிரியந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
ஜெனிவா தீர்மானம் தொடர்பாக நாளை நடைபெறவிருந்த முழுநாள் நாடாளுமன்ற விவாதம், அரை நாளாக குறைக்கப்பட்டுள்ளது.