ஒட்டாவா உடன்பாட்டில் சிறிலங்காவை கையெழுத்திடக் கோருகிறது பிரித்தானியா
கண்ணிவெடிகளைத் தடை செய்யும் ஒட்டாவா உடன்பாட்டில் சிறிலங்கா கையெழுத்திட வேண்டும் என்று பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.
கண்ணிவெடிகளைத் தடை செய்யும் ஒட்டாவா உடன்பாட்டில் சிறிலங்கா கையெழுத்திட வேண்டும் என்று பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.
சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று தனது போராட்டத்தை கைவிட்டுள்ளார்.
அடுத்த அதிபர் தேர்தலில் சிறிலங்கா அதிபர் மைத்தி்ரிபால சிறிசேனவே வெற்றி பெறுவார் என்றும், கோத்தாபய ராஜபக்ச வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லை என்று மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை ஈடுபடுத்துவதற்கு, சிறிலங்காவின் சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவர் யு.ஆர்.டி .சில்வா எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
தாம் ஒருபோதும் நாட்டைப் பிரிக்க அனுமதிக்கமாட்டேன் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு- மருதானையில் நேற்று புத்தர் சிலை ஒன்றை திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் இருந்து கொழும்பு மேல் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்ட சிறிலங்கா கடற்படையின் மூன்று புலனாய்வு அதிகாரிகளையும் கண்டுபிடிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து நேற்று கண்டியில் மகாநாயக்கர்களைச் சந்தித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறிலங்கா பயணம் தொடர்பாக விளக்கமளித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான, ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் உயர்மட்டக் குழுவொன்று இந்த வாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.
இந்திய கடற்படையின் நீர்ப்பரப்பு ஆய்வுக் கப்பலான ஐஎன்எஸ் தர்ஷக் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
கடந்த 16 மாதங்களில் வணிகக் கப்பல்களுக்கு அளித்து வந்த பாதுகாப்புச் சேவையின் மூலம், சிறிலங்கா கடற்படை, 3 பில்லியன் ரூபாவை வருமானமாகப் பெற்றுள்ளது. காலியில் உள்ள நிலையத்தில் இருந்தே இந்த வருமானம் பெறப்பட்டுள்ளது.