20 ஆவது திருத்தச்சட்ட வரைவு – விரைவில் உச்சநீதிமன்றத்தின் முடிவு
சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச்சட்ட வரைவு தொடர்பான தமது தீர்மானத்தை உச்சநீதிமன்றம் விரைவில் அறிவிக்கவுள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச்சட்ட வரைவு தொடர்பான தமது தீர்மானத்தை உச்சநீதிமன்றம் விரைவில் அறிவிக்கவுள்ளது.
தற்போதைய முதல் பெண்மணி மீதும் கூட சில் துணிகளை விநியோகம் செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தார் என்று வழக்கும் தொடுக்கப்படலாம் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் தமது சொத்துக்கள் பொறுப்புகள் பற்றிய விபரங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மூன்று ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சிறிலங்கா அதிபரின் முன்னாள் செயலர் லலித் வீரதுங்க மற்றும், தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனுஷ பல்பிட்ட ஆகியோர் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறிலங்கா காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளராக, சானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் தலைவர் ஆரியதாச குரே இதனைத் தெரிவித்துள்ளார்.
ஊழல்கள், மோசடிகள், மற்றும் அதிகாரம், அரசாங்க வளங்கள் முன்னுரிமைகள் தவறாகப் பயன்படுத்தப்பட்ட மோசமான செயற்பாடுகள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட அதிபர் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்படாததால் அதன் செயற்பாடுகள் முடிவுக்கு வரவுள்ளன.
அமைச்சர் சரத் பொன்சேகா ஒரு பைத்தியம் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ச நாடாளுமன்றத்தில் ஆவேசத்துடன் கூறியுள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள 66 வீதிகளை புனரமைப்புச் செய்து, தரமுயர்த்துவதற்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பாக, சிறிலங்காவுடனும் இந்தியாவுடனும் ஜப்பான் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளதாக சிறிலங்காவுக்கான ஜப்பானிய தூதுவர் கெனிச்சி சுகனுமா தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாக, கூட்டு எதிரணி அறிவித்துள்ளது.