அடுத்தமாதம் சிறிலங்கா வருகிறார் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்
உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடு, மற்றும் மீளநிகழாமையை உறுதிப்படுத்துவதற்கான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர், பப்லோ டி கிரெய்ப் அடுத்தமாதம் சிறிலங்காவுக்கு மீண்டும் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடு, மற்றும் மீளநிகழாமையை உறுதிப்படுத்துவதற்கான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர், பப்லோ டி கிரெய்ப் அடுத்தமாதம் சிறிலங்காவுக்கு மீண்டும் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
வெலிக்கடைச் சிறைச்சாலை மருத்துவமனையில் நேற்றுப் பிற்பகல் 1 மணி தொடக்கம் 3 மணி வரை திடீர் தேடுதல் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு, சப்ரகமுவ மாகாணசபையும் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் செயலராக இருந்த லலித் வீரதுங்கவும், தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனுஷ பல்பிட்டவும், தமக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்துள்ளனர்.
போர் வீரர்களைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின் கொள்கை நிகழ்ச்சி நிரல் மிகவும் வலுவானது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் வடக்கு ,கிழக்கு மாகாணங்களில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச்செயலர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்துக்கு வந்து விடுவார் என்ற அச்சத்தினால், தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதைத் தவிர்த்து வருவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், சீன குழுவொன்று நேற்று அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்துள்ளது.
இந்தியத் தூதரக உதவிப் பாதுகாப்பு ஆலோசகராக, லெப்.கேணல் ரவி மிஸ்ரா அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவை நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.
தமது முன்னாள் செயலராகப் பணியாற்றிய லலித் வீரதுங்க எந்த தவறையும் செய்யவில்லை என்றும், நாட்டின் பௌத்தர்களுக்கு அவர் ஆற்றிய பணிக்காகவே இந்த நிலைக்கு உள்ளாகியிருப்பதாகவும், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.