மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வேந்தராக அட்மிரல் தயா சந்தகிரி

கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக, சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் தயா சந்தகிரி நியமிக்கப்பட்டுள்ளார்.

தீவிபத்து தடுப்பு ஒத்திகையே சலாவ வெடிவிபத்துக்கு காரணம்?

கொஸ்கம- சலாவ சிறிலங்கா இராணுவ ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்துக்கு அங்கு நடந்த தீவிபத்து தடுப்பு ஒத்திகை காரணமாக இருந்திருக்கலாம் என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஆயுதக் களஞ்சியங்களை இடம்மாற்றுவதற்கு பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை

கொஸ்கம மற்றும் வியாங்கொட ஆயுதக் களஞ்சியங்களை, சன அடர்த்தி குறைந்த பகுதிகளுக்கு இடமாற்றம் செய்வதற்கு, அனுமதி கோரும், அமைச்சரவைப் பத்திரத்தை பாதுகாப்பு அமைச்சு சமர்ப்பிக்கவுள்ளதாக, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

தொண்டர் படையினர் 70 ஆயிரம் பேரின் தனிப்பட்ட ஆவணங்கள் நாசம்

கொஸ்கம- சலாவ இராணுவ முகாமில் இருந்த சிறிலங்கா இராணுவ தொண்டர்படையைச் சேர்ந்த 70 ஆயிரம் படையினரின், தனிப்பட்ட ஆவணங்கள், நேற்றுமுன்தினம் நடந்த வெடிவிபத்தில் முற்றாக அழிந்து போயிருப்பதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரித்தானிய இராஜதந்திரிகள் சம்பந்தனுடன் சந்திப்பு

பிரித்தானிய உயர்மட்ட இராஜதந்திரிகள் இருவர் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

நிதிமோசடி வழக்கு – மீண்டும் கைது செய்யப்பட்டார் பசில்

சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, நிதிமோசடிக் குற்றச்சாட்டில் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறிலங்காவுக்கு 1.5 பில்லியன் டொலர் கடனுதவி வழங்குகிறது அனைத்துலக நாணய நிதியம்

சிறிலங்கா அரசாங்கத்தின் நிதி நிலையை முன்னேற்றுவதற்கு, 1.5 பில்லியன் டொலர் ( 220 பில்லியன் ரூபா) கடனுதவியை வழங்க அனைத்துலக நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது.

அடுத்தவாரம் கொழும்பு வருகிறார் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்

சிறிலங்கா அரசாங்கம் அமைக்கவுள்ள நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பாக ஆராய்வதற்கு, உண்மை, நீதி, மற்றும் மீண்டும் பிரச்சினைகள் ஏற்படாதிருப்பதை உறுதிப்படுத்துவது தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரிப் அடுத்த வாரம் கொழும்பு வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

8 முன்னாள் விடுதலைப் புலிகள் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் எட்டுப் பேர், நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் அருணி ஆட்டிக்கலவினால், குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

வடக்கில் சிங்களவர்கள், முஸ்லிம்களை மீள்குடியேற்றுவதற்கு அமைச்சர்கள் மட்டக்குழு

வடக்கில் சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பாக, அமைச்சர்கள் குழுவொன்றை அமைக்க, சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.