மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை யாழ்ப்பாணம் அனுப்பமாட்டோம்- சிங்கள மாணவர்களின் பெற்றோர்

தமது பிள்ளைகளுக்கு அரசாங்கம் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கும் வரை, அவர்களை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப் போவதில்லை என்று, சிங்கள மாணவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டில் எதிர்பார்க்கப்பட்ட வரி வருமானம் கிடைக்கவில்லை – சிறிலங்கா அரசு தகவல்

இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் எதிர்பார்க்கப்பட்டதை விடவும், குறைவாகவே வரி வருமானம் கிடைத்திருப்பதாக, சிறிலங்காவின் நிதி அமைச்சர் சார்பில் நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ரவிராஜ் படுகொலை– 7 பேருக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில், 7 சந்தேகநபர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளின் தேவைக்கேற்ப மீன்களை ஏற்றுமதி செய்ய முடியாமல் திணறும் சிறிலங்கா

ஐரோப்பிய ஒன்றியத்துக்கான மீன் ஏற்றுமதித் தடை அண்மையில் நீக்கப்பட்ட நிலையில், ஐரோப்பிய நாடுகளின் மீன் தேவைக்கு ஏற்றளவுக்கு, மீன்களை விநியோகிக்க முடியாத நிலையில் இருப்பதாக சிறிலங்கா தெரிவித்துள்ளது.

எதிர்கால முதலீடுகள் குறித்து சீனாவுடன் சிறிலங்கா பேச்சு

chinசிறிலங்காவில் எதிர்கால முதலீடுகள் மற்றும் திட்டங்கள் தொடர்பாக சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

சிங்களவர்களின் நிம்மதி யார் கையில்? – சிறிலங்கா அதிபர் விளக்கம்

சிறிலங்காவில் சிங்கள பௌத்த மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமானால், இங்கு வாழும் ஏனைய இன மக்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மோதலுக்கு காரணமான மாணவர்கள் மீது காணொளி ஆதாரத்தின் அடிப்படையில் கடும் நடவடிக்கை

யாழ்.பல்கலைக்கழகத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற மோதலுக்குக் காரணமான மாணவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்காவின் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொகான் டி சில்வா தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்காவுக்கு அருகதையில்லை – டிலான் பெரேரா

துருக்கியில் இராணுவப் புரட்சி ஏற்படுவதற்குக் காரணமான அமெரிக்காவுக்கு, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு சிறிலங்கா அதிபருக்கு அழுத்தம் கொடுக்கும் தகுதி கிடையாது என்று சிறிலங்கா அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

சாத்தியமான எல்லா வழிகளிலும் சிறிலங்காவுக்கு உதவுவோம் – என்கிறது சீனா

சாத்தியமான எல்லா வழிகளிலும் சிறிலங்காவுக்கு சீனா உதவியளிக்கும் என்று கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தின் வர்த்தக விவகாரங்களுக்கான அதிகாரி வாங் யிங்கி உறுதியளித்துள்ளார்.

மகிந்த, கோத்தாவின் இராணுவப் பாதுகாப்பு விலக்கப்பட்டது சரியே – சரத் பொன்சேகா

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோருக்கான இராணுவப் பாதுகாப்பை விலக்கிக் கொள்வதற்கு, அரசாங்கம் எடுத்த முடிவு சரியானதே என்று அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.