மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

மைத்திரியுடன் நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சிமுறை ஒழிப்பு – நியூசிலாந்தில் ரணில்

நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சிமுறை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தற்போதைய பதவிக்காலத்துடன் ஒழிக்கப்படும் என்று, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ச விபத்தில் காயம்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, விளையாட்டு நிகழ்வு ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தகவல் உரிமை ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமனம்

சிறிலங்காவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தகவல் உரிமை ஆணைக்குவுக்கான ஐந்து உறுப்பினர்களின் பெயர்களை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று விக்னேஸ்வரனுக்கு எதிராக போராட்டம்- பொது பலசேனா ஏற்பாடு

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வவுனியாவில் இன்று போராட்டம் ஒன்றை நடத்தப் போவதாக  பொது பலசேனா அறிவித்துள்ளது.

விக்னேஸ்வரனுக்கு எதிராக மூவினத்தவர்களும் ஒன்றிணைய வேண்டும் – அஜித் பெரேரா

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக, சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் சிறிலங்காவின் மின்சக்தி பிரதி அமைச்சர் அஜித் பெரேரா.

விக்கியின் இனவாதக் கருத்துக்களை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை – கூட்டு எதிரணி குற்றச்சாட்டு

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அண்மையில் வெளியிட்ட இனவாதக் கருத்துக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கண்டனம் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் – சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் முக்கிய கலந்துரையாடல்

தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பாக, சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி, அமைச்சுக்களின் செயலர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் நீண்ட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.

சிறிலங்காவில் 2 பில்லியன் டொலர் முதலிடுகிறது இந்தியா

சம்பூர் அனல் மின் திட்டம் நிறுத்தப்பட்டதால், சிறிலங்காவில் இந்தியாவின் முதலீடுகள் பாதிக்கப்படாது என்றும், அடுத்த மூன்று நான்கு ஆண்டுகளில் சிறிலங்காவில் 2 பில்லியன் டொலர் முதலீடுகளை இந்தியா மேற்கொள்ளும் என்றும் இந்திய வர்த்தக இணை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.

பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கு இந்தியாவிடம் உதவி கோருகிறது சிறிலங்கா

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்திய அரசாங்கத்தின் உதவியை சிறிலங்கா அரசாங்கம் கோரியுள்ளது. சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம இதனைத் தெரிவித்தார்.

லசந்தவின் உடல் தோண்டியெடுப்பு – படம்பிடித்த ஆளில்லா விமானத்தை தேடி வேட்டை

படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் உடல் மேலதிக பரிசோதனைகளுக்காக நேற்று மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது.