மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

விக்கியின் அச்சுறுத்தலுக்கு அரசாங்கம் அடிபணியாது – ஐதேக கண்டனம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உத்தரவிடுவதற்கு முனையக் கூடாது என்று, பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

எழுக தமிழுக்கு அரச சொத்துக்கள் – விக்கியைக் கைது செய்யக்கோரும் கம்மன்பில

பொதுச் சொத்துக்கள் சட்டத்தை மீறி, எழுக தமிழ் நிகழ்வை நடத்திய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைக் கைது செய்ய வேண்டும் என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆறாவது நாளாகத் தொடர்ந்தது தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம்

அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 தமிழ் அரசியல் கைதிகள், நேற்று ஆறாவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

புதிய கட்சியை ஆரம்பிக்கும் திட்டம் இல்லை – மகிந்த ராஜபக்ச

எகலியகொடவில் வரும் ஒக்ரோபர் 8ஆம் நாள் நடக்கவுள்ள கூட்டு எதிரணியின் பேரணியில் புதிய கட்சியை ஆரம்பிக்கும் திட்டம் இல்லை என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழு ஆய்வு

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட தலைவர்களின் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துலக திணைக்கள மூத்த ஆய்வு ஆலோசகர் கலாநிதி சாய் ஷாங்ஜின் தலைமையிலான குழுவே கொழும்பு வந்துள்ளது.

அரசியலமைப்புத் திருத்தம் மரணப் பொறி – என்கிறார் மகிந்த

அரசியலமைப்பைத் திருத்தும் தற்போதைய நகர்வுகள் ஒரு  மரணப் பொறி என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

புதிய கட்சியைப் பதிவு செய்ய மகிந்த அணியினர் எடுத்த முயற்சி தோல்வி

மகிந்த ராஜபக்ச தலைமையில் செயற்படும் கூட்டு எதிரணியினர் புதிய அரசியல் கட்சி ஒன்றைப் பதிவு செய்வதற்கு எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. புதிய அரசியல் கட்சியை இப்போது பதிவு செய்ய முடியாது என்று, கூட்டு எதிரணியினருக்கு சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

பிரகீத் கடத்தப்பட்ட வழக்கில் கைதான 4 இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுக்கு பிணை

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நால்வர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா விமானப்படைத் தளபதியாக எயர் மார்ஷல் கபில ஜெயம்பதி நியமனம்

சிறிலங்கா விமானப்படையின் புதிய தளபதியாக, எயர் வைஸ் மார்ஷல் கபில ஜெயம்பதி நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

மேஜர் ஜெனரல் சுமேத பெரேராவுக்கு அமெரிக்காவில் நியமனம்

நியூயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் பணியகத்துக்கான புதிய இராணுவ இணைப்பதிகாரியாக மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.