மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

சிறிலங்காவில் ஆண்களை விட பெண்களின் ஆயுள்காலம் 6.6 ஆண்டுகள் அதிகம்

சிறிலங்காவில் ஆண்களை விட பெண்களின் சராசரி ஆயுள்காலம், 6.6 ஆண்டுகள் அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது என்று சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரவிராஜ் கொலை வழக்கு ஜூரிகள் சபைக்கு மாற்றப்படுமா? – அடுத்த வாரம் முடிவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கை, ஜூரிகள் சபையில் விசாரணை செய்வதா என்பது குறித்து வரும் 27ஆம் நாள் உத்தரவு பிறப்பிப்பதாக கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பிரபாகரனின் சுவரொட்டி ஒட்டிய பெண்ணை உடன் நாடுகடத்த நீதிமன்றம் உத்தரவு

மருதனார்மடத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் ஒளிப்படத்துடன் சுவரொட்டியை ஒட்டினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, ஜேர்மனியில் குடியுரிமை பெற்ற பெண்ணை உடனடியாக நாடுகடத்த கொழும்பு  மேலதிக நீதிவான் அருணி ஆட்டிக்கல உத்தரவிட்டார்.

ஜிஎஸ்பி வரிச்சலுகை குறித்து பேச பிரசெல்ஸ் செல்கிறார் சிறிலங்கா பிரதமர்

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை மீளப் பெறுவது தொடர்பான பேச்சுக்களை நடத்துவதற்கு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பெல்ஜியம் செல்லவுள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கான கொள்கை, சட்டவரைவுக்கு அமைச்சரவை அனுமதி

சிறிலங்காவில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்துக்குப் பதிலாக, அறிமுகப்படுத்தப்படவுள்ள பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டத்தின் கொள்கை மற்றும் சட்ட வரைவுக்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் இந்திய கடலோரக் காவல்படைக் கப்பல்

இந்திய கடலோரக் காவல்படையின் மாசுக் கட்டுப்பாட்டுக் கப்பலான,  சமுத்ர பகீரெடர், கொழும்பு துறைமுகத்தை நேற்று வந்தடைந்துள்ளது.

சிறிலங்காவில் மருந்துப் பொருட்கள் உற்பத்தி துறையில் ரஸ்யா, இந்தியா முதலீடு

இரண்டு வெளிநாட்டு நிறுவனங்கள் சிறிலங்காவில் மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை நிறுவவுள்ளன. 10 மில்லியன் டொலர் பெறுமதியான இந்த இரண்டு திட்டங்களிலும், ரஸ்யா மற்றும் இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்யவுள்ளன.

கொழும்புத் துறைமுகத்தில் மூன்று ஜப்பானிய போர்க்கப்பல்கள்

ஜப்பானியக் கடற்படையின் மூன்று போர்க்கப்பல்கள் நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. ஜப்பானிய கடல் தற்காப்புப் படையின் போர்க்கப்பல்களான, கஷிமா, செடோயுகி, அசாகிரி ஆகியனவே கொழும்புத் துறைமுகம் வந்துள்ளன.

ஊடகங்களுக்கு எதிரான இரகசிய நடவடிக்கை – இராணுவத்துக்கு தெரியாதாம்

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ஊடகங்களுக்கு எதிராக எந்த இரகசிய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டது தொடர்பாக, சிறிலங்கா இராணுவத்துக்குத் தெரியாது என்று, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.

தென்கொரியாவுடன் சிறிலங்கா பாதுகாப்பு உடன்பாடு

பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்புகளை விரிவாக்கிக் கொள்வது தொடர்பாக சிறிலங்காவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்பாடு ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.