மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

ரவிராஜ் கொலை வழக்கு ஜூரிகள் சபையிடம் – கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கை சிறப்பு ஜூரிகள் சபை முன் விசாரிக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.

மதிப்புக் கூட்டு வரி திருத்தச்சட்டம் நிறைவேறியது – வாக்கெடுப்பை புறக்கணித்தது கூட்டமைப்பு

சிறிலங்கா அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட மதிப்புக்கூட்டு வரி திருத்தச் சட்டம் 66 மேலதிக வாக்குகளால் நேற்று நாடாளுமன்றத்தில், நிறைவேற்றப்பட்டது.

ஆவா குழுவை வேட்டையாடும் நடவடிக்கையில் சிறப்பு அதிரடிப்படை

சுன்னாகத்தில் இரண்டு சிறிலங்கா காவல்துறை புலனாய்வாளர்கள் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுக்கு ஆவா குழு, துண்டுப் பிரசுரம் மூலம் உரிமை கோரியுள்ளதையடுத்து, வடக்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மாணவர்கள் கொலை – விசாரணை பற்றிய தகவல்களை வெளியிடத் தடை

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் கொலை தொடர்பாக நடத்தப்படும் விசாரணை பற்றிய தகவல்களை வெளியிட வேண்டாம் என்று, சிறிலங்கா காவல்துறை கண்டிப்பான உத்தரவை அதிகாரிகளுக்குப் பிறப்பித்துள்ளது.

மாணவர்கள் படுகொலை – ஒருவாரத்தில் விசாரணை அறிக்கை

கொக்குவிலில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் அறிக்கை ஒரு வாரத்தில், சமர்ப்பிக்கப்படும் என்று, ஆணைக்குழுவின் செயலர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்தார் இந்திய வெளிவிவகாரச் செயலர்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சிறிலங்காவுக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை மீள வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகை சிறிலங்காவுக்கு மீளக் கிடைப்பது, அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பொருளாதார மற்றும் அரசியல் மறுசீரமைப்பு செயற்பாடுகளிலேயே தங்கியிருப்பதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு வந்தார் இந்திய வெளிவிவகாரச் செயலர் ஜெயசங்கர்

இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் மூன்று நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக நேற்றுமாலை 4.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

ஈரான் செல்கிறார் சிறிலங்கா அதிபர்

ஈரான் இஸ்லாமியக் குடியரசுடனான உறவுகளை விரிவுபடுத்தும் நோக்கில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்த சில வாரங்களில், தெஹ்ரானுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

உயிரை மாய்த்த புலனாய்வு அதிகாரி லசந்த கொலை நடந்த போது வீட்டில் இருந்தமை அம்பலம்

சண்டே லீடர் ஆசிரியரை தாமே சுட்டுக் கொன்றதாக கடிதம் எழுதி வைத்து விட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரி அந்தச் சமயத்தில் தனது வீட்டிலேயே இருந்தார் என்று உறுதிப்பட்டுள்ளது.