மேலும்

சிறிலங்கா அதிபருடன் சீனத் தூதுவர் சந்திப்பு

சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங், சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை  சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக சீனத் தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது,  சீனா-சிறிலங்கா இடையிலான  இருதரப்பு உறவுகள், இரு நாடுகளுக்கு இடையிலான நடைமுறை ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர ஆர்வம் கொண்ட விவகாரங்கள் குறித்து ஆழமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *