மேலும்

அமெரிக்க மரைன் படைப்பிரிவின் விநியோக குழுத் தளபதி கொழும்பு வருகை

கலிபோர்னியாவின் கேம்ப் பெண்டில்டனில் (Camp Pendleton) உள்ள 1வது மரைன் விநியோகக் குழுவின் (1st Marine Logistics Group) தளபதியான பிரிகேடியர் ஜெனரல் ஓமர் ரண்டால் (Omar Randall) சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்க மரைன் படைப்பிரிவின் 251வது பிறந்தநாள் விழாவிற்கான  சிறப்புப் பேச்சாளராக கலந்து கொள்வதற்காகவே அவர், கொழும்புக்குப் பயணம் மேற்கொண்டிருப்பதாக அமெரிக்க தூதுவர் எரிக் மேயர் தெரிவித்துள்ளார்.

“அவரது வருகை, மரைன் படைப்பிரிவின் 251 ஆண்டுகால சேவையைக் கொண்டாடுவதோடு, பசுபிக் விளிம்புப் பகுதி (RIMPAC) பயிற்சி உட்பட, அமெரிக்க மற்றும் சிறிலங்கா மரைன்களுக்கு இடையேயான வளர்ந்து வரும் ஒத்துழைப்பையும் எடுத்துக்காட்டுகிறது.

நமது மரைன்கள் ஒன்றிணைந்து பணியாற்றுவதையும், வலுவான உறவுகளைக் கட்டியெழுப்புவதையும், இந்தியப் பெருங்கடல் முழுவதும் நமது படைகள் இணைந்து செயற்படும் விதத்தை மேம்படுத்துவதையும் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது.“ என்றம் அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *