புதிதாக மூன்றுக்கு அங்கீகாரம் – பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் 87 ஆக அதிகரிப்பு
மேலும் மூன்று அரசியல் கட்சிகளுக்கு சிறிலங்கா தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதையடுத்து, சிறிலங்காவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் மொத்த எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது.
1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 7(5) உட்பிரிவின் கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, இந்த மூன்று கட்சிகளுக்கான அங்கீகாரம், ஒக்டோபர் 21ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எமது மக்கள் முன்னணி , தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ் தேசிய பசுமை இயக்கம் ஆகியனவே, புதிதாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாகும்.
இந்த மூன்று கட்சிகளும் குறித்த சட்ட விதிகளுக்கு அமைவாக, தேர்தல் நோக்கங்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாகக் கருதப்படத் தகுதியுடையவை என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க, அறிவித்தார்.
