விசாரணைகள் நிறைவு- தீர்ப்பு சபாநாயகர், சிறிலங்கா அதிபருக்கு
‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம்’ அரசியலமைப்புக்கு உட்பட்டதா என்பது குறித்த 26 மனுக்களின் விசாரணையை உயர்நீதிமன்றம் நேற்று நிறைவு செய்துள்ளது.
பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சுரசேன மற்றும் நீதியரசர்கள் அச்சல வெங்கப்புலி, சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, குறித்த சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை குறித்த தனது இரகசியத் தீர்ப்பை, நாடாளுமன்ற சபாநாயகருக்கும் சிறிலங்கா அதிபருக்கும் அறிவிக்கப் போவதாக உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
