அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலருடன் மகிந்த சமரசிங்க சந்திப்பு
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் கலாநிதி போல் கபூரை, அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதுவர் மகிந்த சமரசிங்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நேற்று முன்தினம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பில் இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதி உதவிச் செயலர் பெதானி போலஸ் மொறிசனும் கலந்து கொண்டிருந்தார்.
சிறிலங்கா தூதுவருடன், தூதரகத்தின் பிரதி தலைவர் மதுகா விக்ரமாச்சி, தூதரக அதிகாரி சதுரி பெரேரா, பாதுகாப்பு ஆலோசகர் கொமடோர் துமிந்து அபேவிக்ரம ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.


