ஆழ்கடலில் செயலிழந்த கப்பலின் 14 மாலுமிகளும் மீட்பு
சிறிலங்காவிற்கு தெற்கே சுமார் 100 கடல் மைல் தொலைவில், முக்கிய இயந்திரங்கள் செயலிழந்து தத்தளித்த இன்டர்கிரிட்டி ஸ்டார் ( INTEGRITY STAR) என்ற வணிகக் கப்பலின் பணியாளர்களை சிறிலங்கா கடற்படை மீட்டுள்ளது.
இந்தியா, துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாடுகளைச் சேர்ந்த கப்பலில் இருந்த 14 பணியாளர்களும் மீட்கப்பட்டு நேற்றுக்காலை அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.
ஆபத்து அறிவிப்பு கிடைத்தவுடன்,கடற்படை, பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுப்படி, கொழும்பில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஏற்பாட்டில், தேடல் மற்றும் மீட்புப் பணிக்காக சமுத்ர என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பலை அனுப்பியது.
அதேவேளை, அருகிலுள்ள மற்றொரு வணிகக் கப்பலான மோர்னிங் குளோரி ( MORNING GLORY) பாதிக்கப்பட்ட கப்பலுக்கு உதவ தயாராக இருந்தது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
