மேலும்

புலம்பெயரும் தொழிலாளர் எண்ணிக்கை வீழ்ச்சி

2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை 5சத வீதத்தினால் குறைந்துள்ளது.

சிறிலங்கா மத்திய வங்கியின் தரவுகளின்படி, இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை  143,037 ஆகும்.

பொருளாதார நிலைமைகளில் முன்னேற்றம் மற்றும் உள்நாட்டு ஊதிய உயர்வு ஆகியவை வெளிநாட்டு தொழிலாளர் இடம்பெயர்வைக் குறைத்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

2025 ஜனவரியில், 25,873 பேர் வெளிநாட்டு வேலைகளுக்காகச் சென்றனர், இது கடந்த ஆண்டுடன் ( 25,149) ஒப்பிடும்போது சற்று அதிகம்.

பின்னர்  பிப்ரவரி மாதத்திலிருந்து புறப்பாடுகள் குறைந்துள்ளதாக தரவுகள் காட்டுகிறது.

இதற்கிடையில், தொழிலாளர்களின் பணம் அனுப்புதல் செப்டம்பரில் 695.7 மில்லியன் டொலராக உயர்ந்தது, இது 2025 ஆம் ஆண்டில் இதுவரை மூன்றாவது மிக உயர்ந்த மாதாந்த வரவாகும் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு 25.2வீத  அதிகரிப்பை பிரதிபலிக்கிறது.

ஒட்டுமொத்தமாக, 2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் பணம் அனுப்புதல்கள் ஆண்டுக்கு ஆண்டு 20வீதம் அதிகரித்து-  5.8 பில்லியன் டொலரைத்  தாண்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *