மன்னாரில் கனிம மணல் அகழ்விற்கு எதிராக அடிப்படை உரிமைகள் மனு
மன்னார் தீவில் முன்மொழியப்பட்டுள்ள கனிம மணல் பிரித்தெடுக்கும் திட்டத்தை எதிர்த்து அடிப்படை உரிமைகள் மனு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் நீதி மையம் (CEJ), மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை சந்தியோகு மார்கஸ் மற்றும் மூன்று பேர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
மன்னார் பிராந்தியத்தில் வழங்கப்பட்ட சுரங்க உரிமங்களை நிறுத்தி வைக்கும் இடைக்கால உத்தரவை மனுதாரர்கள் கோருகின்றனர்.
அத்தகைய அனுமதிகள் முறையான சட்ட நடைமுறைகள் இல்லாமல் மற்றும் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் வழங்கப்பட்டதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த வழக்கு நேற்று பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் நீதிபதி சம்பத் அபயகோன் ஆகியோர் அடங்கிய இரண்டு நீதியரசர்ளைக் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
மேலும் பரிசீலித்து உண்மைகளை உறுதிப்படுத்துவதற்காக இந்த மனுவை 2026 பிப்ரவரி 10ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.