வடக்கு, கிழக்கை பிரித்த எஸ்.எல்.குணசேகர மரணம்
சிங்கள பௌத்த கடும்போக்காளரும், சிறிலங்காவின் அரசியலமைப்பு சட்ட நிபுணருமான எஸ்.எல்.குணசேகர உடல்நலக் குறைவினால் இன்று மரணமானார்.
71 வயதான அவர் இன்று காலை வீட்டில் காலமானதாக குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
தமிழர்களுக்கு அதிகாரங்கள், உரிமைகளை வழங்குவதற்கு எதிரான கடும் போக்கை கொண்டிருந்த இவர், இந்திய-சிறிலங்கா உடன்பாட்டின் மூலம் ஒன்றிணைக்கப்பட்டிருந்த வடக்கு,கிழக்கு மாகாணங்களை பிரிப்பதற்கான முக்கிய சூத்திரதாரியாக விளங்கியவர்.

உயர்நீதிமன்றத்தில், வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரித்த தீர்ப்பு வெளியான பின்னர் விமல் வீரவன்ச, எச்.எல்.டி சில்வா, கோமின் தயாசிறி ஆகியோருடன் எஸ்.எல்.குணசேகர.
சட்டநிபுணர்களும், சிங்கள பௌத்த பேரினவாதிகளுமான எச்.எல்.டி.சில்வா, கோமின் தயாசிறி ஆகியோருடன் இணைந்து சிறிலங்கா உயர்நீதிமன்றத்தில் வடக்கு,கிழக்கு மாகாணங்களின் இணைப்பு தவறானது என்ற தீர்ப்பை பெற்றுக் கொடுத்தவர் எஸ்.எல்.குணசேகர என்பது குறிப்பிடத்தக்கது.