தேசிய புலனாய்வு தலைவர் பதவியிலிருந்து விலகினார் ருவான் வணிகசூரிய
தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் பதவியிலிருந்து மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய நேற்று அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார்.
60 வயதை எட்டிய நிலையில் அவர், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் தனது பணிகளில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.
சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் அதிகாரியான மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய இந்த ஆண்டு ஜனவரியில் தேசிய புலனாய்வு பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.
திலிருந்து நாட்டின் புலனாய்வு வலையமைப்பையும், நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பையும் வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார்.
