பணவீக்கம் ஒரே மாதத்தில் 0.6 சதவீதத்தினால் அதிகரிப்பு
தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டினால் (NCPI) அளவிடப்படும் சிறிலங்காவின் ஒட்டுமொத்த பணவீக்கம், ஒரே மாதத்தில், 0.6 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.
2025 ஓகஸ்ட் மாதத்தில் பணவீக்கம்1.5 வீதமாகப் பதிவாகியிருந்தது.
இது செப்ரெம்பரில் 2.1 வீதமாக உயர்ந்துள்ளது என்று சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் மாதத்தில் 2.9வீதமாக இருந்த உணவுப் பணவீக்கம்,செப்ரெம்பரில் 3.8 வீதமாக அதிகரித்துள்ளது.
உணவு அல்லாத பொருட்களின் ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கம் ஓகஸ்ட் மாதத்தில் 0.4வீதமாக இருந்த நிலையில், கடந்த மாதம் 0.7 வீதமாக அதிகரித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.