அமெரிக்க வர்த்தக பிரதிநிதியுடன் பேச்சு நடத்தவுள்ள சிறிலங்கா குழு
சிறிலங்காவின் உயர்மட்டக் குழு வரும் செவ்வாய்க்கிழமை அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜெமிசன் கிரேரைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள பரஸ்பர வரிகளில் இருந்து விலக்குப் பெற்றுக் கொள்வது தொடர்பான பேச்சுக்களை நடத்த சிறிலங்கா அரசின் உயர் மட்டக் குழுவொன்று வொசிங்டனுக்கு பயணம் மேற்கொள்கிறது.
வெளிவிவகார அமைச்சு, வர்த்தக அமைச்சு மற்றும் நிதியமைச்சின் அதிகாரிகளை உள்ளடக்கிய இந்தக் குழுவினர் வரும் செவ்வாய்க்கிழமை அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜெமிசன் கிரேரைச் சந்தித்துப் பேச்சு நடத்துவார்கள் என்று, அமைச்சர் அனில் ஜயந்த பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதிக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட கடிதப் பரிமாற்றங்களை அடுத்து, இந்தக் குழுவினர் அமெரிக்கா செல்லவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.