கடற்படை கூட்டுப் பயிற்சி நிறுத்தம் – மறுக்கிறது சிறிலங்கா அரசு
சிறிலங்கா – பாகிஸ்தான் கடற்படைகள் திருகோணமலையில் நடத்தவிருந்த கூட்டுப் பயிற்சி இந்தியாவின் எதிர்ப்பை அடுத்து, ரத்துச் செய்யப்பட்டதாக வெளியான செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் தூதரகத்தின் வேண்டுகோளின் பேரில் வழங்கப்பட்ட அனுமதிக்கு அமைய, பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் கொழும்புக்கு வந்ததாகவும், இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்ட பின்னர், மார்ச் 6 ஆம் திகதி அந்தப் போர்க்கப்பல் நாட்டை விட்டுப் புறப்பட்டதாகவும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் கடற்படையுடனான கூட்டுப் பயிற்சி ரத்துச் செய்யப்பட்டதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே, திருகோணமலையில் நடக்கவிருந்த இந்தப் பயிற்சி நிறுத்தப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.